Home /News /technology /

பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 மினி மீது ரூ.15,850 வரை ஆபர் அறிவிப்பு; பெறுவது எப்படி?

பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 மினி மீது ரூ.15,850 வரை ஆபர் அறிவிப்பு; பெறுவது எப்படி?

Apple I Phone 13 mini

Apple I Phone 13 mini

பிளிப்கார்ட்டில் சலுகையின் கீழ் நீங்கள் ஒரு புதிய ஆப்பிள் ஐபோன் 13 மினி மாடலை, பிளிப்கார்ட்டில் சுமார் ரூ.51,000 க்கு வாங்கலாம்.

மலிவு விலையில் ஐபோன் வாங்க இது சரியான நேரம்! ஏனெனில் பிளிப்கார்ட் தளமானது, ஐபோன் 13 மினி மாடல் மீது பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்த சலுகையின் கீழ் நீங்கள் ஒரு புதிய ஆப்பிள் ஐபோன் 13 மினி மாடலை, பிளிப்கார்ட்டில் சுமார் ரூ.51,000 க்கு வாங்கலாம். தரமான விலைக் குறைப்பு சலுகையுடன் சேர்த்து, இந்த ஈ-காமர்ஸ் இணையதளம் எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் வங்கி சலுகைகளையும் வழங்குகிறது. ஐபோன் 13 மினி மீதான விலைக்குறைப்பானது ரூ.3,000-ஐ மிச்சப்படுத்தும். கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தினால், 128ஜிபி வேரியண்ட்டின் விலை ₹51,050 ஆக குறையும். இந்த சலுகை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் இதோ:

ஐபோன் 13 மினி மீதான சலுகைகள்:

ரூ.5000 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் சிட்டி கிரெடிட் கார்டு / டெபிட் கார்டுகளை வைத்து இருப்பவர்கள் 10 சதவீதம் (ரூ.1000 வரை) தள்ளுபடியை பெறுவார்கள். அதேசமயம், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு வைத்து இருப்பவர்கள் ஐபோன் 13 மினி மாடலை வாங்க பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 5 சதவிகிதம் அன்லிமிடெட் கேஷ்பேக்கைப் பெறலாம்.

Also read:   தாலிபான்களை எதிர்த்த நியூசி பெண் ஊடகவியலாளர்.. தாலிபான்களிடமே தஞ்சம்!!

நீங்கள் எக்ஸ்சேன்ஜ் சலுகையை தேர்வு செய்தால், ஐபோன் 12 மினி மீது ரூ.15,850 வரையிலான தள்ளுபடியை பெறலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் பின்கோடை உள்ளிடுவதன் மூலம் உங்கள் பகுதியில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்ப்பது மட்டுமே ஆகும். மற்ற வேரியண்ட்களில், அதாவது ஐபோன் 13 மினி மாடலின் 256ஜிபி மற்றும் 512ஜிபி வகைகளின் மீதும் வங்கி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் கிடைக்கிறது.

ஐபோன் 13 மினி மீதான சலுகைகள்:

ஐபோன் 13 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மீது 6 சதவீத தள்ளுபடி அணுக கிடைக்கிறது மற்றும் பிளிப்கார்ட்டில் இதன் விலை ரூ.74,900 என்று பட்டியலிடப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த போனின் விற்பனை விலை ரூ.79,990 ஆகும். பிளிப்கார்ட் தளம் இந்த மாடலின் மீது எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது, இதன் கீழ் நீங்கள் ரூ.18,850 வரை மிச்சம் செய்யலாம்.

Also read:  நியோகோவ் வைரஸால் ஆபத்து? மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?

ஐபோன் 13 மாடல் மீதான வங்கி சலுகைகளை பொறுத்தவரை, சிட்டி கிரெடிட் / டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி, (ரூ.5000 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் ரூ.1000 வரை சலுகை கிடைக்கும்) மற்றும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 5 சதவிகிதம் அன்லிமிடெட் கேஷ்பேக் கிடைக்கும். மற்ற வேரியண்ட்களில், அதாவது ஐபோன் 13 மாடலின் 256ஜிபி மற்றும் 512ஜிபி வகைகளின் மீதும் குறிப்பிட்ட வங்கி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் கிடைக்கும்.

ஐபோன் 13 ப்ரோ மீதான சலுகைகள்:

பிளிப்கார்ட்டில், ஐபோன் 13 ப்ரோ மாடலின் 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.1,19,900 ஆக உள்ளது. இதன் மீது ரூ.18,850 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபர் கிடைக்கும். உடன் சிட்டி கிரெடிட் / டெபிட் கார்டுகளில் 10 சதவீதம் தள்ளுபடியும் பெறலாம், மேலும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயனர்கள் 5 சதவிகிதம் அன்லிமிடெட் கேஷ்பேக்கையும் பெற முடியும். இதே சலுகைகள் 256ஜிபி மற்றும் 512ஜிபி வேரியண்ட்களிலும் அணுக கிடைக்கும்.

இதையும் படிங்க ...  டாய்லெட்டுடன் சுற்றித்திரியும் வடகொரிய அதிபர்.. அதை யார் தொட்டாலும் சுட்டு விடுவாராம்!! - ரகசியம் என்ன?

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மீதான சலுகைகள்:

பிளிப்கார்ட்டில், இதன் 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.1,29,900 ஆக உள்ளது. இதன் மீதும் ரூ.18,850 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபர் கிடைக்கும். மேலும் சிட்டி கிரெடிட் / டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு 5 சதவிகிதம் அன்லிமிடெட் கேஷ்பேக்கும் கிடைக்கும். ஐபோன் 13 ப்ரோ மேக்ஸின் மற்ற 256ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் அணுக கிடைக்கும்.
Published by:Arun
First published:

Tags: Apple, Apple iphone

அடுத்த செய்தி