ஐபோன் என்றால் அதற்கென்று தனி வகையான வாடிக்கையாளர்கள் எப்போதும் உண்டு. எப்படியாவது தனது வாழ்நாளில் ஒரு ஆப்பிள் புராடக்ட்டையாவது வாங்கி விட வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு. இதன் காரணமாக தான் ஐபோன் நிறுவனம் அவ்வப்போது பல விதமான புராடக்ட்களை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது.
அதே போன்று, புது புது அம்சங்களையும் கொண்டு வருகிறது. இந்நிலையில், ஐபோன் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம், இந்தியாவிற்கான மொபைல் போன்களை உற்பத்தி செய்வது மட்டுமின்றி, டிசம்பர் மாத நிலவரப்படி 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது என்று அந்நிறுவனத்தின் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய வணிக சமூகத்துடனான அதிகாரப்பூர்வ ஜி20 உரையாடல் மன்றமான தி பிசினஸ் 20 (B20) நிகழ்வில் பேசுகையில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் அல்கேஷ் குமார் சர்மா, இந்தியாவை ஒரு சேவை சார்ந்த நாடு என்கிற இடத்தில் இருந்து தயாரிப்பு சார்ந்த நாடாக மாற்றுவதற்கு பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
மேலும், உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் உண்மையில் சந்தையில் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது என்று பேசினார். மேலும், நமது நாட்டின் மொபைல் உற்பத்தி என்பது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது என்றும், இதன் மூலம் பொருளாதாரமும் மேம்படுகிறது என்றும் மாநாட்டில் குறிப்பிட்டு பேசினார். குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் உற்பத்தியை பற்றி குறிப்பிட்டு இருந்தார். இப்போது கிடைத்துள்ள டிசம்பர் புள்ளிவிவரபடி 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொபைல் போன்களை ஏற்றுமதி செய்துள்ளனர் என்று சர்மா கூறினார்.
Also Read : வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி சொன்ன Oneplus..!
முன்னதாக, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க விரும்புகிறது என்றும், இந்த வணிகச் சூழல் உலகளாவிய நிறுவனங்களுக்கு நாட்டை தங்கள் தளமாக மாற்ற உதவுகிறது என்றும் குறிப்பிட்டு பேசி இருந்தார். ஆப்பிள் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஐபோன்களை ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் உற்பத்தி ஆலையில் தயாரித்து வருகிறது. எலக்ட்ரானிக் ஹார்டுவேர், செமிகண்டக்டர்கள் மற்றும் ஃபேப்ரிகேஷன் ஆலைகள் போன்ற வசதிகளை உருவாக்க இந்தியா முழு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருவதாக சர்மா கூறினார்.
Also Read : ஆதார் நம்பரை பயன்படுத்தி வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும் AePS - எவ்வாறு செயல்படுகிறது?
மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும், ஆழமான தொழில்நுட்பத்தில் நிறைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளை செய்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டார். இவற்றுடன் சூப்பர் கம்ப்யூட்டிங் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் பணிகள் பற்றி பேசி இருந்தார். 20 பெட்டாஃப்ளாப் திறனையும் உருவாக்கியுள்ளனர் என்றும், இது இப்போது பல ஐஐடிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், தொழில்நுட்பங்கள் ஒரு புதிய ஐந்தாவது தூணாக உளது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple iphone, Export, India, IPhone, Tamil News