5ஜி தொழில்நுட்பத்துடன் 2020-ல் வெளியாகும் ஆப்பிள் ஐ-ஃபோன்: மிங் சீ கூ!

5ஜி தொழில்நுட்பத்துடனான ஐஃபோன் 2020-ன் பிற்பாதியில் வெளியாகும் என்றே ஆய்வாளர் மிங் சீ கூ கூறுகிறார்.

5ஜி தொழில்நுட்பத்துடன் 2020-ல் வெளியாகும் ஆப்பிள் ஐ-ஃபோன்: மிங் சீ கூ!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: July 29, 2019, 6:06 PM IST
  • Share this:
ஆப்பிள் ஐ-ஃபோன் வருகிற 2020-ம் ஆண்டு 5ஜி தொழில்நுட்பத்துடனே வெளியாகும் என ஆப்பிள் ஆய்வாளர் மிங் சீ கூ தெரிவித்துள்ளார்.

மிங் சீ கூ என்பவர் ஆப்பிள் தயாரிப்புகளை ஆராய்ந்து அது தொடர்பான செய்திகளை வெளியிடக்கூடிய ஒரு ஆய்வாளர். இவரது கணிப்பின் அடிப்படையில் 2020-ம் ஆண்டு வெளிவரும் ஆப்பிளின் மூன்று ரக மாடல்களும் 5ஜி தொழில்நுட்பத்துடனே வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் 5ஜி தொழில்நுட்பத்துடன் சர்வதேச அளவில் ஐ-போன்களை வெளியிடுமா அல்லது sub-6GHz நெட்வொர்க் உதவக்கூடிய சீனாவில் மட்டும் இந்த 5ஜி ஐ-ஃபோன் வெளியாகுமா என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. ஆனால், வெறும் sub-6GHz உதவி மட்டுமே தற்போதைக்கு 5ஜி தொழில்நுட்பத்துக்கு உதவும்.


ஆனால், வருங்கால வளர்ச்சிகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்த வேண்டுமெனில் mmWave தொழில்நுட்பம் அவசியமாகிறது. ஆப்பிள் தற்போது mmWave (அதிகப்படியான அதிர்வெண்) தொழில்நுட்பத்தை சோதனை முயற்சியில் பயன்படுத்தி வருகிறது.

இதுபோன்ற பல செய்திகளின் அடிப்படையில் 5ஜி தொழில்நுட்பத்துடனான ஐஃபோன் 2020-ன் பிற்பாதியில் வெளியாகும் என்றே ஆய்வாளர் மிங் சீ கூ கூறுகிறார்.

Also see:
First published: July 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்