இன்னும் ஓரிரு மாதங்களில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 சீரிஸை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வெளிவர உள்ள ஸ்மார்ட்போனின் விலை குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளியாகி உள்ள தகவல்களின் படி, ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேக்கு ஆதரவாக notch-ஐ நீக்கும் முதல் மாடல்களாக வரும் என கூறப்படுகிறது. மேலும் இப்போது ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் ஐபோனின் முந்தைய மாடல்களை விட அதிக விலை கொண்டதாக இருக்கும் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
கேஜெட் டென்டென்சி (Gadget Tendency) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐபோன் 14 சீரிஸின் விற்பனையை 90 மில்லியன் யூனிட்களுடன் வரும் செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் தொடங்குகிறது. கடந்த வாரம், சப்ளை 10 சதவீதம் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் எகனாமிக் டெய்லியின் ஒரு அறிக்கையானது, ஆப்பிள் சப்ளையர்களை மேற்கோள் காட்டி சப்ளை குறைவு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை, ஆகஸ்ட் மாத இறுதியில் ஃபாக்ஸ்கான் பெரிய அளவிலான உற்பத்தியை தொடங்கும் என்று கூறியுள்ளது.
அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட தகவல்களின்படி, iPhone 14 Pro 128GB வேரியன்ட்டானது $1,100-ல் தொடங்கும் அதாவது இதன் விலை $1,099-ஆக இருக்கலாம். மறுபுறம் iPhone 14 Pro Max-ன் அடிப்படை 128GB வேரியன்ட்டின் விலை $ 1,200 முதல் அதாவது $1,199-ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2 மாடல்களின் அதிகாரப்பூர்வ விலை உறுதிப்படுத்தலுக்கு முன்னதாக, பிரபல லீக்ஸ்டர் ஆண்டனியும் மேற்கண்ட விலையில் ஐபோன் 14 சீரிஸ் அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்பு அதிகம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த தகவல்கள் துல்லியமாக இருந்தால், புதிய iPhone Pro மாடல்கள் கடந்த ஆண்டை விட $100 (தோராயமாக ரூ.8,000) விலை அதிகமாக இருக்கும். அதாவது ஐபோன் 14 சீரிஸில் வெளியாகும் இரண்டு மாடல்களும் இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். முன்னதாக ஐபோன் 13 ப்ரோ இந்தியாவில் ரூ.1,19,900 மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ரூ.1,29,900-க்கு அறிமுகமானது நினைவிருக்கலாம்.
Also Read : ரூ.75,000-க்குள் உங்களுக்கு கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட் ஃபோன்கள்.!
எனினும் நீடித்து வரும் உலகளாவிய சிப்செட் பற்றாக்குறை பிரச்சனை மற்றும் பணவீக்க அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு மத்தியில் சமீபத்தில் ஆப்பிள் ஜப்பானில் ஐபோன் 13 சீரிஸின் விலையை உயர்த்தியது. இதனிடையே iPhone 14 pro மற்றும் iPhone 14 Max மொபைல்கள் Apple A15 Bionic chip-ன் மிகவும் சக்திவாய்ந்த வெர்ஷனுடன் வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read : ஆஃப்லைன் ஜிமெயில் வசதியை வழங்கும் கூகுள் - மெயில் படிப்பது, அனுப்புவது & தேடுவது குறித்து அறிவோம்.!
120Hz AMOLED டிஸ்ப்ளே, இரண்டு 12 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்ட 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் ஃபேஸ் ஐடி ஆகியவை அம்சங்களுடன் வரும் என்றும் கூறப்படுகிறது. பேட்டரியைப் பொறுத்த வரை iPhone 14 pro மற்றும் iPhone 14 Max மாடல்கள் முறையே 3,200mAh யூனிட் மற்றும் 4,323mAh யூனிட் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.