Home /News /technology /

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ்; பெருமளவு ஆதரவு காட்டாத வாடிக்கையாளர்கள்

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ்; பெருமளவு ஆதரவு காட்டாத வாடிக்கையாளர்கள்

ஐஃபோன் 14 சீரிஸ்

ஐஃபோன் 14 சீரிஸ்

Apple iPhone 14 | ஆப்பிள் நிறுவனமானது தன்னுடைய ஐஃபோன் 14 சீரீஸ்-ல் ஐஃபோன் 14, ஐஃபோன் 14 மேக்ஸ், ஐஃபோன் 14 ப்ரோ, ஐஃபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை வெளியிட உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆப்பிள் நிறுவனமானது தன்னுடைய ஐஃபோன் 14 வரிசையில் தயாரிக்கப்பட்ட மொபைல்களை செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப் போவதாக இந்த வார துவக்கத்தில் தெரிவித்தது. இந்த சீரிஸ் ஆனது ஐஃபோன் 14, ஐஃபோன் 14 மேக்ஸ், ஐஃபோன் 14 ப்ரோ மற்றும் ஐஃபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை உள்ளடக்கியதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே புதிய வகை ஐஃபோன் அறிமுகமாகிறது என்றாலே அனைவரிடமும் ஒரு வித எதிர்பார்ப்பும், இணையதளம் எங்கும் அது குறித்த பதிவுகளுமே நிறைந்து இருக்கும். ஆனால் இன்த முறை இந்த ஐஃபோன் 14 சீரிஸ் யாரும் பெருமளவு ஆர்வம் காட்டவில்லை.

ஐஃபோன் 14 சீரீஸ் மொபைல் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே மீதம் உள்ளது என்னும் நிலையில் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆப்பில் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தன்னுடைய மினி ஐஃபோன் தயாரிப்பை நிறுத்தி விட்டதாக அறிவித்துள்ள ஆப்பிள் நிறுவனமானது, அதற்கு பதிலாக பெரிய திரையை கொண்ட ஐஃபோன் 14 மேக்ஸ் என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. ஐஃபோன் 14, ஐஃபோன் 14 மேக்ஸ், ஐஃபோன் ப்ரோ, ஐஃபோன் 14 ப்ரோ என்ற நான்கு புதிய மாடல்களை இந்த வருட இறுதிக்குள் பார்க்கலாம்.

இவற்றில் ஐஃபோன் 14 ப்ரோ மற்றும் ஐஃபோன் 14 ப்ரோ மேக்ஸ் மட்டுமே ஆப்பிளின் புதிய வகை பிராசசர் ஆன A16 பயானிக் சிப்பை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐஃபோன் 14 மற்றும் ஐஃபோன் 14 மேக்ஸ் ஆகிய மாடல்களில் பயன்படுத்தப்படும் பிராசசர் ஆனது ஆப்பிள் A15 பயானிக் சிப்பின் அப்க்ரேடட் வெர்ஷன் என்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.



தன்னுடைய ஐஃபோன் 14 ப்ரோ மற்றும் ஐஃபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. தன்னுடைய டிரேட் மார்க்கான நாட்ச் வகை திரைக்கு பதிலாக, பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த பஞ்ச் ஹோல் டிசைனை கொண்ட பல்வேறு விதமான வடிவங்களுடன் பல ஆண்ட்ராய்டு மொபைல்கள் ஏற்கனவே சந்தையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read : சோஷியல் மீடியாவில் நீங்க படிப்பது எல்லாம் உண்மை தகவலா..! - என்ன சொல்கிறது ஆய்வு

மேலும் இந்த ஆப்பிள் ஐஃபோன் 14 சீரிஸ் மொபைல்களை இந்தியாவில் தயாரித்து வெளியிட ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஃபாக்ஸ் கான் எனும் நிறுவனம் ஐஃபோன் மொபைலுக்கான பாகங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவில் தன்னுடைய மொபைல் உற்பத்தியை நிறுத்துவதாக முடிவு செய்துள்ள ஆப்பிள் நிறுவனமானது, அதற்கு பதிலாக இந்தியாவில் உற்பத்தியை துவங்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Also Read : ஆண்ட்ராய்டு 13 வந்தாச்சு... உங்கள் மொபைலுக்கு டவுன்லோடு செய்வது எப்படி?

ஏற்கனவே சீனாவில் தயாரித்த மொபைல்களை ஏற்றுமதி செய்த பிறகு, இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள் சந்தைக்கு வரும் என தெரியவந்துள்ளது. சீனாவில் நிலவி வரும் கோவிட் தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்ட லாக் டவுன் மற்றும் சமீபகாலமாக நிலவி வரும் அசாதாரணமான உலக அரசியல் சூழ்நிலையால் தன்னுடைய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. செப்டம்பர் 7ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் இந்த ஐஃபோன் 14 மொபைல்கள், செப்டம்பர் 16 முதல் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என தகவல்கள் கசிந்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Apple iphone, Technology

அடுத்த செய்தி