ஆப்பிள் ஐபோன் வாங்க நினைக்கும் பலரும் அதில் தற்போது அறிவித்துள்ள பல மாறுதல்களை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் ட்ரெண்ட்டிங்கில் உள்ளவற்றை தவறவிடாமல் இருக்க முடியும். சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் 14 சிரீஸ் மாடல் பல மாறுபாட்டைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு புதிய சாதனத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, ஐபோன் 14 மேக்ஸ் மாடலானது 90Hz OLED டிஸ்ப்ளேவுடன் வர உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இதன் சிப்செட்டுடன் 6GB ரேம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய அம்சங்கள் ஆப்பிள் ஐபோன் மீது அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்த புதிய வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்க சுமார் $300 (ரூ. 21,000) டாலர் கூடுதலாக செலவழிக்க வேண்டி இருக்கும். ஐபோன் 14 சிரீஸின் முந்தைய இரண்டு மாடல்களை போலவே இவையும் இருக்கும். ஆனால் ஆப்பிள் மினி மாடலை தவிர்த்து, மேக்ஸ் மாடலை வாங்கினால் பல வசதிகளும் சிறப்பம்சங்களும் கிடைக்கும். இதன் காரணமாக, வெண்ணிலா ஐபோன் 14 சந்தையில் அடிப்படை மாறுபாட்டை பெற்றுள்ளது.
ஐபோன் 14 மேக்ஸ் மாடலானது ஐபோன் 13 சீரிஸின் அதே ஹார்டுவேர் ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதையும் இதன் மூலம் சுட்டிக்காட்டி உள்ளனர். ஆனால் 6ஜிபி ரேம் மேம்படுத்தல் மற்றும் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆகிய புதிய அம்சங்கள் வாங்குபவர்களை ஈர்க்க கூடும். ஐபோன் 14 மேக்ஸ் மாடலில் டூயல் 12 மெகாபிக்சல் கேமராக்களை கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆப்பிள் ஐபோன் 14 மேக்ஸ் மாடலில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரு வேறு வசதிகளும் தரப்பட உள்ளன. அதே நேரத்தில் ஐபோன் 14 ப்ரோ சீரிஸில் 2 டிபி வரை உயர்த்தப்படலாம். இந்த ஐபோன் 14 சிரிஸை சுற்றி ஏற்கனவே நிறைய உரையாடல்கள் வந்து கொண்டுள்ளன.
ஆப்பிள் இந்த புது மாடல் தயாரிப்புகளை வெளியிடுவதற்கு இன்னும் சில காலம் எடுத்து கொள்ளலாம். இதுகுறித்து அடுத்த மாதம் நடைபெறும் விர்ஷுவல் மீட்டிங்கில் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உட்பட பல அம்சங்களை பெறவுள்ளது.
Also Read : ரூ.20,000 பட்ஜெட்டில் ஒரு தரமான 5ஜி போனை தேடுறீங்களா? 1 இல்ல 9 ஆப்ஷன்ஸ் இருக்கு!
இந்த ஐபோன்கள் நாட்சுக்கு பதிலாக புதிய மாத்திரை ஹோல் டிசைனைக் கொண்டிருக்கலாம், இதனால் ஆப்பிள் இந்த ஆண்டு ப்ரோ அல்லாத மற்றும் ப்ரோ ஐபோன்களை வேறுபடுத்த அனுமதிக்கிறது. ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போனின் அடுத்த ஐஓஎஸ் பற்றிய தகவலையும் இந்த வெளியீட்டில் தரவுள்ளது. ஐபோன் பிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கான சிறந்த மொபைல் குறித்த பல்வேறு அறிவிப்புகளை பெற்று, தரமான அம்சங்களை கொண்ட உங்களுக்கான மொபைலை பதிவு செய்ய தயாராகுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.