தவறாக லோகோ அச்சிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ ரூ .2 லட்சத்துக்கு விற்பனை!

தவறாக லோகோ அச்சிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ ரூ .2 லட்சத்துக்கு விற்பனை!

தவறாக லோகோ அச்சிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ

எண்ணற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இருந்தாலும் ஆப்பிள் போன்களுக்கு எப்போதும் தனி மவுசு சந்தையில் உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒரு அரிதான சம்பவத்தில், தவறாக லோகோ அச்சிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ ரூ.2 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எண்ணற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இருந்தாலும் ஆப்பிள் போன்களுக்கு எப்போதும் தனி மவுசு சந்தையில் உள்ளது. ஆப்பிள் மிகவும் கடுமையான மற்றும் முழுமையான தயாரிப்பு உத்தரவாதத்தை கொண்டுள்ளது. ஆயினும்கூட, சில நேரங்களில் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பிலும் சிறிய தவறுகள் ஏற்படுகிறது, ஆனால் இது அரிதானது. அதாவது சுமார் ஒரு மில்லியனில் ஒரு ஐபோனில் இத்தகைய பிரச்னை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இது அந்த நிறுவனத்திற்கு எந்த தீங்கையும் விளைவிக்கவில்லை, மாறாக வழக்கத்தை விட அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இன்டர்னல் காப்பகம் வெளியிட்டுள்ள ட்வீட்டின் படி, ஐபோன் லோகோ போனின் பின்புறத்தில் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. வழக்கமாக, ஆப்பிள் லோகோ போனின் மையத்தில் இருக்கும். ஆனால் இந்த போனில் லோகோ வலதுபுறத்தில் சற்று தள்ளி அமைந்துள்ளது.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சரியாக அதனை கவனித்தால் குறைபாட்டை காண முடியும். இந்த ஐபோன் எங்கே வாங்கப்பட்டது அல்லது படங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. புகைப்படங்கள் உண்மையில் உண்மையானவை என்றால், இது ஒரு தயாரிப்பு பகுதியில் நடந்த தவறாக இருக்கலாம். இந்த தவறு பெரும்பாலும் அடிக்கடி ஏற்படாது, ஆம், டிசைனில் பிழை உள்ள ஐபோன் மிகவும் அரிதானது, இதனை நன்கு கவனித்தால் லோகோ செங்குத்தாக இருப்பதை கவனிக்க முடியும்.

Also read... மீண்டும் வருகிறது பப்ஜி - கூகுள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் பேர் முன்பதிவு!

ஆனால் ஆப்பிள் தயாரிப்பில் தவறு ஏற்படுவது இது முதல் முறை அல்ல, 9to5Mac.com-ன் அறிக்கையின்படி, 2015ம் ஆண்டில், ஒரு யூசர் ஐபாட் புரோ வாங்கிய நிலையில், அது தனித்துவமான வண்ண கலவையுடன் கிடைத்தது, அதாவது முன் பக்கத்தில் தங்க நிறத்திலும், பின்பக்கத்தில் வெள்ளி நிறத்திலும் இருந்தது. இதற்கிடையில், ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஐபோன் வெளியீட்டுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே வதந்திகள் வரத் தொடங்கியுள்ளன.

ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோவின் வெளியிட்ட புதிய தகவல்களின்படி, அடுத்து வரும் ஐபோனின் கேமரா திறன்கள் குறித்த தகவளை வெளியிட்டுள்ளார். அதில் இந்த ஆண்டின் ஐபோன் மாடல்கள் தற்போதைய ஐபோன் 12 மடல்களை போலவே லென்ஸை கொண்டிருக்கும் என்று கூறினார். அதாவது ஐபோன் 13-ல் குறைந்தது ஒரு கேமரா லென்ஸ் மாறாமல் இருக்கும். முந்தைய அறிக்கைகள் ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 புரோ மேக்ஸ் ஆகியவற்றில் ஆட்டோஃபோகஸ் கேமரா திறன்களுடன் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: