வெளியான புது ஐபோன் மாடல்கள்... ஆப்பிளின் விலைப்பட்டியல் வெளியீடு...!

புதிய போன்களின் விற்பனை இந்தியாவில் வருகிற செப்டம்பர் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது.

Web Desk | news18
Updated: September 11, 2019, 4:03 PM IST
வெளியான புது ஐபோன் மாடல்கள்... ஆப்பிளின் விலைப்பட்டியல் வெளியீடு...!
கலிஃபோர்னியாவில் நடந்த புதிய ஐபோன் வெளியீட்டு நிகழ்வு(Image: Apple/News18.com)
Web Desk | news18
Updated: September 11, 2019, 4:03 PM IST
இந்தியாவில் புதிய ஆப்பிள் ஐபோன் மாடல்கள் வெளியாகி உள்ளன. புது அப்டேட் உடனான போன்கள் உடன் பழைய மாடல்களும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என்றும் ஆப்பிள் உறுதிபடுத்தியுள்ளது.

2018-ம் ஆண்டுக்கான ஆப்பிள் ஐபோனைவிட இம்முறை வெளியாக உள்ள ஆப்பிள் ஐபோன் 11-ன் விலை குறைவாகத்தான் உள்ளது. இந்தியாவில் 64,900 ரூபாய்க்கு ஐபோன் 11 விற்பனைக்கு வந்துள்ளது. ஆறு நிறங்களில் வெளியாகியுள்ள ஐபோன் 11, 64 ஜிபி ரகம் 64,900 ரூபாய்க்கும் 128 ஜிபி ரகம் 69,900 ரூபாய்க்கும் விற்பனையில் உள்ளது.

இதேபோல், 256 ஜிபி ஸ்டோரேஜ் ரகம் 79,900 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் XR 76,900 ரூபாய்க்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் போனும் வெளியாகி உள்ளது.


இந்த இரு போன்களுமே நான்கு நிறங்களில் வெளியாகி உள்ளன. 64 ஜிபி ஐபோன் 11 ப்ரோ 99,900 ரூபாய், 256 ஜிபி 1,13,900 ரூபாய், 512 ஜிபி 1,31,900 ரூபாட் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 64 ஜிபி ரகம் 1,09,900 ரூபாய்க்கும் 256 ஜிபி 1,23,900 ரூபாய்க்கும் 512 ஜிபி 1,41,900 ரூபாய்க்கும் விற்பனை ஆக உள்ளது. புதிய போன்களின் விற்பனை இந்தியாவில் வருகிற செப்டம்பர் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது.

மேலும் பார்க்க: டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் அதிக இடங்களில் சாம்சங்... முதலிடத்தைப் பிடித்த போன் எது?

மூன்று வகையான ஐபோன்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்!

Loading...

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...