கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவில் தங்களது வருவாய் இரட்டிப்பாக்கியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறி இருக்கிறது. குறிப்பாக ஐபோன் 13 சீரிஸின் அமோக விற்பனை மூலம் இந்திய வருவாயில் சாதனையையும் படைத்துள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாயான டிம் குக் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை தவிர பிரேசில், வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில் ஆப்பிள் நிறுவனம் வலுவான வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. காலாண்டு வருவாய் பற்றிய அறிவிப்பின் போது விநியோகச் சங்கிலி தடைகள் இருந்த போதிலும் வருவாயில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக நிறுவனம் கூறியது. சமீபத்தில் பேசிய டிம்குக், பிரேசில், இந்தோனேசியா மற்றும் வியட்நாமில் இரட்டை இலக்க வளர்ச்சியுடன் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் இந்த காலாண்டு சாதனை வருவாயை பதிவு செய்துள்ளோம். இந்தியாவை பொறுத்த வரை புதிய இரட்டிப்பு வருவாய் பதிவாகி இருக்கிறது என்றார்.
இதனிடையே ஆப்பிளின் சர்விசஸ் பிசினஸை பற்றி பேசிய CFO லூகா, நாங்கள் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் ஜூன் காலாண்டு வருவாயில் ரெகார்டஸ் படைத்தது உள்ளோம். அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில், கொரியா மற்றும் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் ஆல்-டைம் ரெக்கார்ட்ஸ் படைத்துள்ளோம் என்றார். சைபர் மீடியா நடத்திய ரிசர்ச் ஒன்றின் படி, ஆப்பிள் கடந்த ஜூன் காலாண்டில் இந்தியாவிற்கு 1.2 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை ஷிப்பிங் செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம்.
Also Read : இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடக்கம் - எங்கு தெரியுமா?
மார்க்கெட் இன்டலிஜென்ஸ் நிறுவனமான சைபர் மீடியா ரிசர்ச் (சிஎம்ஆர்) பகிர்ந்த தரவுகளின்படி, ஐபோன் 12 மற்றும் 13 மாடல்களின் அபரிமிதமான விற்பனையால் ஆப்பிளின் இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது. ஷிப்பிங் செய்யப்பட்ட ஐபோன்களில் கிட்டத்தட்ட 1 மில்லியன் 'மேக் இன் இந்தியா' டிவைஸ்கள் ஆகும். இதனிடையே Apple iPads இந்தியாவில் ஈர்க்கக்கூடிய 34% வளர்ச்சியை (ஆண்டுக்கு) பதிவு செய்தது மற்றும் நிறுவனம் 0.2 மில்லியனுக்கும் அதிகமான டிவைஸ்களை நாட்டில் விற்பனை செய்துள்ளது என்று CMR தெரிவித்துள்ளது. iPad ஏற்றுமதிகளில் iPad Gen 9 மற்றும் iPad Air ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட ஐபோன் உற்பத்தித் திறன்கள், இந்தியாவில் அதன் வலுவான வளர்ச்சி வேகத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகின்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஐபோன் 13 ஸ்மார்ட் போனை உற்பத்தி செய்ய தொடங்கியதை உறுதிப்படுத்தியது. ஜூன் காலாண்டில் ஆப்பிளின் உலகளாவிய வருவாய் 2% அதிகரித்து $83 பில்லியனாக இருக்கும் அதே சமயம் நிகர லாபம் 11% குறைந்து $19.4 பில்லியனாக உள்ளது. காலாண்டில் ஐபோன் வணிகத்தின் உலகளாவிய வருவாய் 3% உயர்ந்து $40.67 பில்லியனாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.