கூடிய விரைவில், கிட்டதட்ட ஒட்டுமொத்த இண்டர்நெட்டுமே பாஸ்வேர்ட் இல்லாமல் செயல்பட போகிறது. அதாவது யூசர்கள் தங்கள் அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்ய பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். ஏனெனில் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை எஃப்ஐடிஓ (FIDO) அலையன்ஸ் மற்றும் உலகளாவிய வலை கூட்டமைப்பு (World Wide Web Consortium) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பாஸ்வேர்ட் இல்லாத லாக்-இன் (passwordless sign-in) தரநிலைகளுக்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ளன.
"இந்த புதிய திறன் இணையதளங்கள் மற்றும் ஆப்களுக்கு, டிவைஸ்கள் மற்றும் ஆப்ரேட்டிங் சிஸ்டம்களில் உள்ள நுகர்வோருக்கு நிலையான, பாதுகாப்பான மற்றும் எளிதான பாஸ்வேர்ட் இல்லாத லாக்-இன்களை வழங்க அனுமதிக்கும்" என்று ஆப்பிள் கூறி உள்ளது. இந்த ஆதரவு கிராஸ்-பிளாட்ஃபார்ம் மற்றும் பல்வேறு சாஃப்ட்வேர், ஆப்ரேட்டிங் சிஸ்டம், வெப் ப்ரவுஸர்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். ஆப்பிள் தவிர்த்து கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் கூட பாஸ்வேர்ட் இல்லாத லாக்-இன்களுக்கான ஆதரவை அறிவித்துள்ளன.
மேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களுமே கடினமான பாஸ்வேர்ட்களை அமைக்க சொல்வதையும், மேலும் மக்கள் அவற்றை நினைவில் வைத்துக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளன. இதனால் யூசர்கள் ஏற்கனவே பயன்படுத்திய அதே பாஸ்வேர்ட்-ஐ மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக விலையுயர்ந்த அக்கவுண்ட்கள் கையகப்படுத்தப்படுதல், டேட்டா மீறல்கள் மற்றும் டேட்டா திருட்டு போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
ALSO READ | ஆபத்து!! உடனே கூகுள் குரோம் அப்டேட் பண்ணுங்க... மத்திய அரசு எச்சரிக்கை!
இந்த இடத்தில் தான் பாஸ்வேர்ட் இல்லாத லாக்-இன் ஆனது முழு மெக்கானிசத்தையும் வேறு நிலைக்கு கொண்டு செல்கின்றன, இது மிகவும் வசதியானதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்று நிறுவனங்கள் நம்புகின்றன. மேலும் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை இந்த அம்சத்தின் வளர்ச்சியிலும், இணக்கத்தன்மையிலும் பணிபுரிந்ததாக கூறுகின்றன
எஃப்ஐடிஓ (FIDO) லாக்-இன் ஆனது அடிப்படையில் யூசர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோனை அனைத்து டிஜிட்டல் அக்கவுண்ட்களுக்கும் ஒன்-ஸ்டாப் லாக்-இன் மீடியாவாக பயன்படுத்த அனுமதிக்கிறது. எனவே, எதிர்காலத்தில், உங்கள் ஸ்மார்ட்போனின் 4 அல்லது 6 இலக்க பாஸ்வேர்ட், ஃபிங்கர் ஐடி அல்லது ஃபேஸ் ஐடியைப் பயன்படுத்தி உங்கள் ஜிமெயில் அல்லது அவுட்லுக் அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்ய முடியும். ஆக பாஸ்வேர்ட்கள், கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாறும்.
ALSO READ | உலகிலேயே மிக ஸ்லிம்மான 5ஜி ஃபோன் வெளியிடுகிறது மோடோரோலா நிறுவனம் - மே 12ம் தேதி அறிமுகம்!
ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை ஏற்கனவே தங்கள் சேவைகளுக்கான பாஸ்வேர்ட் இல்லாத மெக்கானிசமை ஒருங்கிணைக்க ஸ்க்ரீனுக்கு பின்னால் செயல்படத் தொடங்கியுள்ளன, மேலும் இது அனைத்து யூசர்களுக்கும் ஓரிரு வருடங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பிற தளங்களும், கூடிய விரைவில் பாஸ்வேர்ட் இல்லாத லாக்-இன் செயல்முறையின் கீழ் வேலை செய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த "சிஸ்டம்" எவ்வாறு இயங்கும் என்பதைப் பார்க்க நீங்கள் ஆர்வமாக இருக்கலாம், அதே சமயம் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, உங்கள் ஸ்மார்ட்போன்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாததாக மாறும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் இனிமேல் அவைகள் தொடர்புகொள்வதற்கான ஒரு ஊடகமாக மட்டும் இருக்காது; உங்களின் ஒட்டுமொத்த டிஜிட்டல் உலகிற்கான முக்கிய அணுகலாக மாறும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.