Home /News /technology /

Apple Far Out 2022 : புதிய மாடல் போன்களின் லிஸ்ட் இது தான்; எதிர்ப்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்.!

Apple Far Out 2022 : புதிய மாடல் போன்களின் லிஸ்ட் இது தான்; எதிர்ப்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்.!

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம்

Apple Far Out 2022 | iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro and iPhone 14 Pro Max ஆகிய மாடல் போன்கள் நாளை நடைபெறவுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் Far Out 2022 அறிமுகம் செய்யப்படவுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆப்பிள் நிறுவனத்தின் ஃபார் அவுட் 2022 நிகழ்வு வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி அதாவது நாளை இரவு 10.30 மணிக்கு வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் பல புதிய வகை மாடல் போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக ஐபோனின் அடுத்த சீரிஸ் iphone 14 மாடலின் விலை மற்றும் அதன் அம்சங்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு மற்றும் பரப்பரப்பு வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் Apple Far Out 2022 ல் iphone 14, iphone 14max, iphone 14 pro and iphone 14 pro max போன்ற மாடல்களும் அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் தான், இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

Iphone 14:

ஐபோன் 14 மாடல்களின் விலையானது, முந்தைய iPhone 13 சீரிஸ் மாடல்களை விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் ஐபோன் 13 ன் f/2.2 aperture யை ஓப்பிடும் போது, iphone 14 ன் முன்பக்க கேமரா மற்றும் செல்பி கேமிரா ஆட்டோஃபோகஸ் திறன் மற்றும் பரந்த f/1.9 aperture கொண்டதாக அமையவுள்ளது. இதோடு இந்த மாடல்கள் அனைத்தும் ios 16, A 16 பயோனிக் சிப் மற்றும் முன்னோடியுடன் ஒப்பிடும் போது மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் பேட்டரி அம்சங்களுடன் வரவுள்ளது.



Apple Airpods pro 2:

நாளை நடைபெற உள்ள ஆப்பிள் ஃபார் அவுட் நிகழ்வின் போது, ஆப்பிள் ஏர்போட்ஸ் 2 ப்ரோ என்ற புதிய ஏர்போட்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு இந்த மாடலில், H1 processor, லாஸ்லெஸ் ஆடியோ கோடெக் ஆதரவு, இன்- இயர் விங் டிப் டிசைன் மற்றும் பல மேம்பாடுகளுடன் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Also Read : குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியல்..

 

இதே போன்று ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் ப்ரோ, வாட்ச் எஸ்இ யை நாளை அறிமுகம் செய்யவுள்ளது. மற்ற ஸ்மார்ட்வாட்சுகளை ஒப்பிடும் போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அறிமுகமாகிறது. இதன் உதவியோடு உடல் வெப்பநிலை சென்சார் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் இதன் மூலம் அறிந்துக் கொள்ள முடியும். மேலும் S7 ப்ராசரை விட சற்று அதிக சக்தி வாய்ந்ததாக S8 சிப் உள்பட மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Apple, Technology

அடுத்த செய்தி