சென்சாரை பயன்படுத்தி ரத்த ஆக்ஸிஜனைக் கண்காணிக்கும் ஆப்பிள் கடிகாரம், நிறப்பாகுபாடுடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை வெறும் 15 நொடிகளில் கண்டறியும் வசதியுடன் ஆப்பிள் நிறுவனம் கடிகாரத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் இது தெரியாத இதய நோய் அறிகுறிகளைக் கூட கண்டறியும் திறன் பெற்றது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இப்படிப்பட்ட சிறப்பம்சங்களை பெற்ற கடிகாரத்தில் ரத்த ஆக்சிஜன் அளவை கணக்கிடும் சென்சார் கருமையான சருமம் உள்ளவர்களுக்கு எதிராக இனரீதியாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவை சேர்ந்த பிளைன்டிப் அலெக்ஸ் (plaintiff Alex ) என்பவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கருப்பு நிறத்தவர்களின் ரத்த ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதில் இத்தகைய சாதனங்கள் துல்லியமாக செயல்படுவதில்லை என்றும், இதன் விளைவாக, கறுப்பின நோயாளிகள் ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க இத்தகைய கடிகாரத்தை நம்பியிருப்பது அபாயத்தை அதிகரிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், நியூயார்க் பொது வணிகச் சட்டம் மற்றும் மாநில நுகர்வோர் மோசடி சட்டங்களை ஆப்பிள் நிறுவனம் மீறிவிட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple watch, Case