• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • மேக்புக் ப்ரோ முதல் ஐபாட் 3 வரை - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் அணிவகுப்பு!

மேக்புக் ப்ரோ முதல் ஐபாட் 3 வரை - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் அணிவகுப்பு!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள்

புதிய மேக்புக் ப்ரோவில் இரண்டு மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மாடல்களில் உள்ள ஒரே வித்தியாசம் இதன் டிஸ்ப்ளே திரை மட்டுமே.

  • Share this:
'புதிய அறிமுகம்' (unleashed) என்ற நிகழ்ச்சியை ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 18 அன்று நடத்தியது. மேக்புக் ப்ரோ, ஏர்பாட் 3 உள்ளிட்ட பல்வேறு புதிய தயாரிப்புகள் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

உயர் ரக, தனித்துவமான தொழில்நுட்ப சாதனங்களுக்கு தயாரிப்புகளுக்கு பெயர் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு புதிய பொருட்கள் ஒரு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. அதில், மிகவும் முக்கியமானது, M1 ப்ரோ மற்றும் M1 மாக்ஸ் சிப்செட்ஸ்களால் கட்டமைக்கப்பட்ட புதிய மேக்புக் ப்ரோ. கூடுதலாக, இரண்டாவது அப்டேடட் வெர்ஷனை அறிமுகம் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், ஆப்பிள் ஏர்பாட் 3 TWS, ஐபாட் 3-யை அறிமுகப்படுத்தியது. ஒரு சந்தா திட்டம் அறிமுகப்படுத்தி, ஆப்பிள் மியூசிக்கையும் அப்டேட் செய்ய இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது.

சமீபத்தில் தான் `iPhone 13 மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஈவென்ட்டில் அறிமுகமான தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் இங்கே.

ஏர்பாட்ஸ் 3

ஏர்பாட்ஸ் ப்ரோ போலவே காட்சியளுக்கும் ஏர்பாட்ஸ் 3ல், சிறிய அளவிலான ஸ்டெம் மற்றும் கையடக்கமான டிசைன் கொண்டுள்ளது. ஆனால், முந்தைய மாடல்களில் இருந்தது போல இந்த அப்டேட் மாடலில் சிலிகான் இயர்பட்ஸ் இல்லை. ஆப்பிளின் அனைத்து ஆடியோ தயாரிப்புகளில் சேர்க்கப்பட்டிருப்பது போலவே, இந்த ஐபாடிலும் 3D சவுண்ட் வழங்கும், Spatial Audio பயன்படுத்தும் டால்பி ஆடியோ உள்ளது.

இந்த புத்தம் புதிய எர்பாடில் ஹாண்ட்ஸ்ஃப்ரீ சிரி கட்டுப்பாடு, IPX4 வியர்வை நீர்ப்புகா எதிர்ப்பு, ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் வரை பயன்படுத்தக்கூடிய அம்சங்கள் உள்ளது.

M1 ப்ரோ மற்றும் M1 மேக்ஸ் SoCs

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் M1 சிப்செட் அறிமுகப்படுத்திய உடனேயே, அதன் அடுத்தடுத்த வெர்ஷன்களை வெளியிட்டது. புதிய M1 ப்ரோ மற்றும் M1 மேக்ஸ் சிப்செட்ஸ் அதிக செயல்திறனுடன், நீண்ட பேட்டரியையும் வழங்குகிறது என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. 8 பெர்ஃபார்மன்ஸ் கோர்ஸ் (performance cores) மற்றும் 16 GPU கோர்ஸ் உடன் வரும் M1 ப்ரோ, முதல் ஜெனரேஷன் M1 சிப்செட்டை விட இரண்டு மடங்கு வேகமாக செயல்படுகிறது. அதே போல, 10 பெர்ஃபார்மன்ஸ் கோர்ஸ் (performance cores) மற்றும் 32 GPU கோர்ஸ் உடன் வரும் M1 மாக்ஸ், உயர் ரிசல்யூஷன் வீடியோ எடிட்டிங் செய்வதற்கு ஏற்றது.

Also read... நீங்கள் இறந்த பிறகு உங்கள் கூகுள், ஜிமெயில் டேட்டா என்ன ஆகும் தெரியுமா? இதோ முழு விவரம்!

மேக்புக் ப்ரோ 2021

புதிய மேக்புக் ப்ரோவில் இரண்டு மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மாடல்களில் உள்ள ஒரே வித்தியாசம் இதன் டிஸ்ப்ளே திரை மட்டுமே. ஒரு மாடல் 14.2 இன்ச் டிஸ்ப்ளேவையும், மற்றொரு மாடல் 16.2 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. துல்லியமான வண்ணக் காட்சி வழங்கும் மினி எல்இடி பேனல்கள், 120Hz டைனமிக் புதுப்பிப்பு விகிதம், மற்றும் மேம்படுத்தப்பட்ட முன்புற கேமரா ஆகிய சிறப்பு அம்சங்களை இரண்டு மாடல்களும் கொண்டுள்ளன.

இந்த இரண்டு மாடல்களிலும், M1 ப்ரோ மற்றும் M1 மேக்ஸ் சிப்செட்ஸ்களோடு கான்ஃபிகர் செய்யலாம். மேக்புக் ப்ரோ 14 இன் ஆரம்ப விலை ரூ. 1,94,900. அதே சிப்செட் கொண்ட மேக்புக் ப்ரோ 16ன் ஆரம்ப விலை ரூ. 2,39,900 ஆகும். M1 மேக்ஸ் சேர்க்கப்பட்ட மேக்புக் ப்ரோ 16ன் ஆரம்ப விலை ரூ. 3,29,900. இரண்டு மாடல்களிலுமே சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் வருகிறது.

ஆப்பிள் வாய்ஸ் திட்டம் மற்றும் ஹோம்பாட் மினி:

ஆப்பிள் நிறுவனம், தனது ஆப்பிள் மியூசிக் ஆர்வலர்களுக்கு, ஹோம்பாட் மினி ஸ்பீக்கர்கள் மற்றும் புதிய வாய்ஸ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இதன் விலை $4.99 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: