Home /News /technology /

மாஸ் எண்ட்ரி கொடுக்கும் ஆப்பிள்.. புதிய தயாரிப்புகள் ஆப்பிள் ஸ்ப்ரிங் ஈவன்ட்டில் அறிமுகம்

மாஸ் எண்ட்ரி கொடுக்கும் ஆப்பிள்.. புதிய தயாரிப்புகள் ஆப்பிள் ஸ்ப்ரிங் ஈவன்ட்டில் அறிமுகம்

Apple Event

Apple Event

Apple Event 2022 | 5ஜியுடன் கூடிய தேர்ட் ஜெனரேஷன் ஐபோன், மற்றும் புதிய ஐபாட் ஏர் மற்றும் குறைந்தது இரண்டு மேக் புக்காவது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

“பீக் பெர்ஃபார்மன்ஸ்” என்ற தலைப்பில் வரும் மார்ச் 8 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய விர்ச்சுவல் ஈவன்ட்டை நடத்த இருப்பதாக அறிவிப்பை மேற்கொண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை மேக் மினி மற்றும் மேக்புக் ப்ரோ ஆகியவற்றுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால் இவை இந்த ஈவன்ட்டில் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மார்ச் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11:30 மணிக்குத் தொடங்கும்.

ஆப்பிள் புதிய தயாரிப்புகள் அறிமுகம்

சில மாதங்களுக்கு முன்பு இதேபோல ஆப்பிள் நிறுவனம் விர்ச்சுவலாக ஒரு ஈவன்ட்டை நடத்தியது. அதில் ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வரை எந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்யப் போகிறோம் என்பது பற்றி ஆப்பிள் எந்த அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடாமல் இருந்தாலும், புதிய ஐஃபோன் ஐபாட் மற்றும் மேக் புக் ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜியுடன் கூடிய தேர்ட் ஜெனரேஷன் ஐபோன், மற்றும் புதிய ஐபாட் ஏர் மற்றும் குறைந்தது இரண்டு மேக் புக்காவது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.



ஐபோன் 5ஜி கனக்டிவிட்டி

இந்த ப்ராடக்ட்டுகள்தான் வெளியாகப் போகிறது என்று இதுவரை ஆப்பிள் நிறுவனம் உறுதியான செய்தியை தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த நிகழ்வு அனைவரும் வாங்கக்கூடிய விலையில் ஐபோன்களை வெளியிடுவதற்காகத்தான் என்று பலரும் கூறி வருகின்றனர். தனது புதிய ஹார்ட்வேர் மற்றும் 5ஜி கனக்டிவிட்டியுடன் தேர்டு ஜெனரேஷன் ஐபோன் SE தான் இதன் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மலிவு விலையில் ஐஃபோனை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த வெர்ஷனை அறிமுகம் செய்யலாம். 5ஜி ஆண்ட்ராய்டு போன்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் ஐபோன்களை விரும்பலாம்.

Also Read : Windows கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பல OS-களை  இயக்குவது எப்படி?

ஐபாட் ஏர் 5

நிகழ்ச்சியில் புதிதாக அறிமுகமாக இருக்கும் அடுத்த தயாரிப்பு ஐபாட் ஏர் 5. 2020 ஆம் ஆண்டில் ஐபாட் ஏர் 4 ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக இது அப்கிரேட் செய்யப்பட்ட புதிய மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் A15 பயோனிக் சிப்செட், 5ஜீ கனெக்டிவிட்டி மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் கொண்ட கேமரா ஆகியவை சிறப்பு அம்சங்களாக கருதப்படுகின்றன.



ஆப்பிள் மேக் புக்

மேக்புக்குகளுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு மற்றும் தேவைக்கு ஏற்ப பிரத்யேகமான புதிய மேக் வெர்ஷன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில் மூன்று புதிய மேக் புக்ஸ் அறிமுகம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

Also Read : iPhone வைத்திருப்பவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 6 டிரிக்ஸ்

ஆப்பிள் ஸ்ப்ரிங் ஈவன்ட் லைவ் ஸ்ட்ரீம்

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நிகழ்வு லைவ்வாக பல தளங்களில் ஒளிபரப்பாகும். ஆப்பிள் யூஸர்களுக்கு இந்த லைவ் நிகழ்வை ஆப்பிள் டிவி ஆப் மூலம் காணலாம். அதேபோல ஐபாட், மேக் மற்றும் ஆப்பிள் டிவி யூசர்கள் இந்த விர்ச்சுவல் நிகழ்ச்சியை ஆப்பிள் டிவி ஆப் மூலம் லைவாக காணலாம். ஆப்பிள் யூசராக இல்லாதவர்களுக்கு, யூடியூப் சேனலில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான சேனல் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான வெப்சைட்டில் இந்த நிகழ்வின் லைவ் ஸ்ட்ரீமைக் காணலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Apple iphone, IPhone, Technology

அடுத்த செய்தி