கொரோனா பெருந்தொற்று காலத்தின் விளைவாக ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்ற புதிய பணி கலாச்சாரம் உருவெடுத்தது. உலகெங்கிலும் தற்போது கொரோனா பிரச்சினை பரவலாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணி செய்யுமாறு ஊழியர்களை பல்வேறு நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றன.
அதே சமயம், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்தாலும் உற்பத்தி திறன் பாதிக்கப்படுவதில்லை என்று கருதும் சூழலிலும், அலுவலக மேலாண்மை செலவுகள் இல்லை என்ற சூழலிலும் சில நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் கான்செப்ட்டை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன.
இந்த இரண்டையும் கலந்த ஹைபிரிட் வொர்க் முறையை முன்வைக்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்த ஹைப்ரிட் திட்டம் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது மே 2ம் தேதி வரையில் வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகத்தில் வேலை செய்வது, எஞ்சியுள்ள நாட்களில் வீட்டில் இருந்து பணி செய்வது என்ற ஹைபிரிட் கான்செப்ட் முன்வைக்கப்பட்டது. மே 23ம் தேதியில் இருந்து அலுவலகத்திற்கு வர வேண்டிய நாட்கள் 3 நாட்களாக மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஊழியர்கள் எதிர்ப்பு :
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நியூயார்க் போஸ்ட் என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “ஒரு நாள் கூட நான் இனி அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய மாட்டேன். அப்படி ஒன்று நடக்கவே நடக்காது’’ என்று ஆப்பிள் நிறுவன ஊழியர் ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பணியாளர்கள் பலரும் இதே எண்ண ஓட்டத்தில் தான் இருக்கின்றனர்.
ஹைப்ரிட் பணி முறை அமலுக்கு வந்த பிறகு, தங்களின் பணி விலகல் கடிதங்களை அனுப்பி வைக்க இருப்பதாக மற்றொரு ஊழியர் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வது மட்டுமல்லாமல், வேலைக்கு செல்வதற்காக பயணம் செய்யவும் நேரம் ஒதுக்க வேண்டும். அது என்னால் முடியாது’’ என்று தெரிவித்தார்.
Also Read : விலை உயர்ந்த ஐபோனை குறைந்த விலையில் வாங்குவது எப்படி?
முன்னதாக, ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வர வைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஆப்பிள் நிறுவன முதன்மை செயல் அதிகாரி டிம் குக் பேசினார். அவர் கூறுகையில், “உங்களில் பலருக்கு தெரியும். மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணி செய்ய வேண்டும் என்பது நமது நீண்ட கால இலக்கு என்று தெரிந்திருக்கும். அதே சமயம், நமது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிற சக ஊழியர்களுடன் இணைந்து முழு மனதாக பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆனால், ஒரு சில ஊழியர்களுக்கு இது ஏற்க முடியாத சவாலாக இருக்கும்’’ என்று கூறியிருந்தார்.
Also Read : 34 வயது நபரின் உயிரைக் காத்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்...
பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர சொல்லியுள்ள நிலையில் பணியை ராஜினாமா செய்ய ஊழியர்கள் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்கும் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர விரும்புகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple, Work From Home