ஜனவரி 1-ம் தேதியில் மட்டும் ரூ.222.5 கோடி வருவாய்...! அதிரடியான துவக்கத்தில் ஆப்பிள்

ஒரு வார விழாக்காலத்தில் மட்டும் சர்வதேச அளவில் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் 1.22 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆப்பிள் நிறுவனத்துக்கு வருவாய் ஆக அளித்துள்ளனர்.

Web Desk | news18
Updated: January 6, 2019, 1:25 PM IST
ஜனவரி 1-ம் தேதியில் மட்டும் ரூ.222.5 கோடி வருவாய்...! அதிரடியான துவக்கத்தில் ஆப்பிள்
ஆப்பிள்
Web Desk | news18
Updated: January 6, 2019, 1:25 PM IST
கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரையில் உள்ள ஒரு வார விழாக்காலத்தில் மட்டும் சர்வதேச அளவில் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் 1.22 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆப்பிள் நிறுவனத்துக்கு வருவாய் ஆக அளித்துள்ளனர்.

குறிப்பாக, ஜனவரி 1, 2019 அன்று மட்டும் 322 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளது ஆப்பிள். விழாக்காலக் கொண்டாட்டத்தின் ஒரு வாரத்தில் மட்டும் இதுவரையில் எந்தவொரு நிறுவனமும் சாதிக்காத லாபத்தை ஆப்பிள் பெற்றுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஆப்பிள் துணைத்தலைவர் பில் ஸ்கில்லர் கூறுகையில், “ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் எங்களுக்கு 1.22 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானம் தந்துள்ளது.

எங்களது திறமையான கேம் டெவலப்பர்கள் அனைவருக்கும் மிகப்பெரும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் வாடிக்கையாளர்கள் அளித்த பெரும் ஆதரவில் 2018-ம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து பெரிய வெற்றியுடன் 2019-ம் ஆண்டை தொடங்கியுள்ளோம்” என்றார் மகிழ்ச்சியுடன்.

மேலும் பார்க்க: ஒரு நல்ல பையனுக்காக காத்துட்ருக்கேன்... திருமணத்திற்கு தயாராகும் தமன்னா
First published: January 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...