Apple Days sale on Flipkart: ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் போன்களுக்கு ரூ.9,000 வரை தள்ளுபடி அறிவிப்பு!

மாதிரி படம்

கூடுதலாக, மக்கள் HDFC வங்கி அட்டைகள் மற்றும் எளிதான EMI பரிவர்த்தனைகளுக்கு பொருந்தக்கூடிய ரூ. 5,000 உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.

  • Share this:
    ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ், ஃப்ளிப்கார்ட்டில் ஆப்பிள் டேஸ் விற்பனை மீண்டும் ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஐபோன்களில் பெரிய தள்ளுபடிகளை பெற முடியும். அதேபோல, மேக் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற சாதனைகளுக்கும் நிறுவனம் பல சலுகைகளை வழங்க உள்ளது. இந்த ஆப்பிள் டேஸ் விற்பனை கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 24) தொடங்கியது மற்றும் சனிக்கிழமை முடிவடைகிறது. அதாவது ஆகஸ்ட் 28 தேதியோடு நிறைவடைகிறது.

    எனவே நீங்கள் ஐபோன் 12 மினி அல்லது ஐபோன் 12 ப்ரோ மேக்ஸைப் வாங்க காத்திருக்கிறீர்கள் என்றால், இது கட்டாயம் உங்களுக்கு லாபத்தை மீட்டுத்தரும். சமீபத்திய பிளிப்கார்ட் விற்பனை மேலும் உங்களுக்கு நல்ல ஒப்பந்தங்களை வழங்குகின்றன. அவற்றை பற்றி விரிவாக காண்போம். இந்த விற்பனையில் ஐபோன் 12 மினி, அதிகபட்சம் ரூ .8,000 வரையிலான தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ .69,000 ஆகும். இந்த தள்ளுபடிகள் மூலம் இந்த மொபைல் உங்களுக்கு ரூ.61,900 என்ற விலையில் கிடைக்கும். அதேபோல இந்த ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது, ​​ஐபோன் 12 மினி கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுதவிர HDFC வங்கி கார்டுகள் மற்றும் எளிதான EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ .6,000 உடனடி தள்ளுபடியும் அடங்கும். இந்த சலுகை 64GB வேரியண்ட்டுக்கு மட்டுமே பொருந்தும். அதேபோல, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ரூ. 9,000 வரையிலான தள்ளுபடியுடன் ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கிறது. அதாவது, ரூ.1,29,900 என்ற அசல் விலையில் இருந்து ரூ.1,20,900 என்ற தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இது மிகப்பெரிய தள்ளுபடியாகும். இந்த சலுகையை மேலும் உயர்த்தும் வகையில், ஆப்பிள் டேஸ் விற்பனையின்போது, ​​ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ .4,000 பிளாட் தள்ளுபடியை ஃப்ளிப்கார்ட் வழங்குகிறது.

    கூடுதலாக, மக்கள் HDFC வங்கி அட்டைகள் மற்றும் எளிதான EMI பரிவர்த்தனைகளுக்கு பொருந்தக்கூடிய ரூ. 5,000 உடனடி தள்ளுபடியையும் பெறலாம். இதற்கடுத்ததாக, ஐபோன் 11 அதன் வழக்கமான விலையான ரூ.54,900 இலிருந்து விலகி ரூ.51,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. மேலும் சிட்டி கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.750 வரை தள்ளுபடியை பெறலாம். இருப்பினும், ஐபோன் 11 இல் உடனடி தள்ளுபடி சலுகைகள் எதுவும் இல்லை. இதேபோல், ஐபோன் எக்ஸ்ஆர் அதன் வழக்கமான விலையான ரூ .47,900 இலிருந்து ரூ .41,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

    இறுதியாக, ஐபோன் எஸ்இ 2020, 128GB ஸ்டோரேஜ் மாடல் அதன் அசல் விலையான ரூ.44,900-திலிருந்து ரூ.34,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஐபோன் 11 ப்ரோ மாடலுக்கும் சில தள்ளுபடியை வழங்குகிறது. அதாவது இதன் விலையை ஆப்பிள் இப்போது ரூ.74,999-ஆக குறைத்துள்ளது. மேக் சாதனைகளுக்கு வருகையில், பிளிப்கார்ட் MacBook Air M1-ஐ ரூ.82,990 என்ற தள்ளுபடி விலையில் வழங்குகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர ஆன்லைன் சில்லறை விற்பனையாளருக்கு MacBook Air M1 ரூ.9,910 என்ற தள்ளுபடியுடன் ரூ.88,990 என்ற விலையில் கிடைக்கும்.

    Also read... ஜூன் மாதத்தில் 40 லட்சத்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை இழந்த Vi நிறுவனம்: TRAI அறிக்கை வெளியீடு!

    கூடுதலாக, HDFC வங்கி அட்டைகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்கள் ரூ.6,000 வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். மறுபுறம், MacBook Pro-ஐ HDFC வங்கி அட்டைகளில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.7,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. அதன்படி 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.105,990 ஆகக் விலை குறைக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்டில் ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது, ​​ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 ஆனது HDFC வங்கி அட்டைகளில் உடனடி தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதன் விலை 40mm அலுமினியம் கேஸ் மாடலுக்கு ரூ .37,900 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published: