Home /News /technology /

Apple MacBook Air | இந்த ஆண்டின் இறுதிக்குள் 70 லட்சம் மேக்புக் விற்பனையாகும்! ஆப்பிள் கணிப்பு

Apple MacBook Air | இந்த ஆண்டின் இறுதிக்குள் 70 லட்சம் மேக்புக் விற்பனையாகும்! ஆப்பிள் கணிப்பு

apple macbook air

apple macbook air

Apple MacBook Air | கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய மேக்புக்குகளை வெளியிட்டது. இதன் அடிப்படை விலை கிட்டத்தட்ட ₹1,00,000க்கு மேல் இருந்தது.

புதிய தயாரிப்புகளை அவ்வப்போது சந்தையில் அறிமுகப்படுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு தனது புத்தம் புதிய மேக்புக் ஏர் 2022 மாடலை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் ப்ராடக்ட்களுக்கு என்றே உலகம் முழுவதிலும் தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது.கோவிட் தொற்றுக்கு பிறகு பல நிறுவனங்களும் வணிகம் அதிகரித்து வந்த நிலையில் ஆப்பிள் நிறுவனமும் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 70 லட்சத்துக்கும் அதிகமான மேக்புக்குகள் விற்பனையாகும் என்று கணித்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக M சீரிஸ் சிப்செட்டுடன் புதிய மேக் மாடலை வெளியிட இருக்கிறது.

2022 ஆம் ஆண்டின் முதல் பாதி கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இரண்டாம் பாதியில் 6 – 7 மில்லியன் யூனிட்கள் விற்பனையாகும் என்று மீடியாவுக்கு வெளியான அறிக்கையில் காணப்படுகிறது. ஆய்வாளர் மிங்-சி குவோ இந்த மாடல் எவ்வளவு விற்பனையாகும் என்பதை பற்றிய முன் கணிப்பை வெளியிட்டுள்ளார். WWDC 2202 கீநோட்டின் அடிப்படையில் இந்த மாடல் வெளியிட இருக்கும் நிலையில் ஏற்கனவே இருக்கும் மேக்புக்குகளைவிட கூடுதலாக சில வண்ணங்களில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆய்வாளர் குவோ ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே கூறியுள்ளது போல இந்த குறிப்பிட்ட மாடல் பல வண்ணங்களில் கிடைக்காது என்பதை தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் 2002 பற்றி செய்தியாளர்களுக்கு பேசுகையில் இந்த மாடலுக்கு எந்த கலர் பேலட் சரியாக இருக்குமோ அதுதான் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆப்பிள் மேக்புக் எந்தந்த நிறங்களில் வருகிறதோ அதே சிக்னேச்சர் நிறங்களில் இந்த புதிய மேக்புக் ஏர் வெளியாகும் என்பதை குவோ உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் மக்களிடம் மேக்புக் வேறு நிறங்களில் கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே இதை நிறைவேற்றும் வகையில் கூடுதலாக ஒரு நிறத்திலும் மேக்புக் ஏர் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மேக்புக் ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் ஆகிய இரண்டு நிறங்களில் வருகின்றன. தற்பொழுது கோல்ட் மற்றும் நீல நிறத்தில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய மேக்புக்குகளை வெளியிட்டது. இதன் அடிப்படை விலை கிட்டத்தட்ட ₹1,00,000க்கு மேல் இருந்தது. மேக்புக் ஏர் 2022-ன் விலை எவ்வளவு இருக்குமென்பதை பற்றிய கணிப்புகளும் கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பலரும் இந்த புதிய எம் சீரிஸ் சிப்செட்டில் வெளியாகும் மேக்புக் ஏர்-இல் வேறு என்ன அம்சங்கள் இருக்கின்றன என்றும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்தகைய எதிர்பார்ப்புதான் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்குள் 70 லட்சம் மேக்புக் விற்பனையாகும் என்று ஆச்சரியமூட்டும் கணிப்பை வெளியிட்டுள்ளன.

Also Read : Xioami ஸ்மார்ட் ஃபோன்களுக்கு இலவச YouTube Premium சப்ஸ்கிரிப்ஷன் - அசத்தலான் ஆஃபர்

கடந்த ஆண்டு போதிய அளவுக்கு யூனிட்கள் உற்பத்தி செய்யப்படவில்லை என்பதால் சப்ளை மற்றும் டெலிவரியில் பிரச்னை ஏற்பட்டது. இந்த ஆண்டு அந்த பிரச்னை எல்லாம் கடந்து வாடிக்கையாளர்களின் டிமாண்டுக்கு ஏற்ற அளவுக்கு மேக்புக் தயாராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Apple, Technology

அடுத்த செய்தி