ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஆப்பிள் பீட்டா யூசர்களுக்கு அடுத்த வாரம் முதல் 5ஜி சேவை அறிமுகம்!

ஆப்பிள் பீட்டா யூசர்களுக்கு அடுத்த வாரம் முதல் 5ஜி சேவை அறிமுகம்!

ஆப்பில் ஐபோன்

ஆப்பில் ஐபோன்

இந்த இடைப்பட்ட காலங்களில் 5ஜி சேவையில் யூஸர்கள் தங்களது அபிப்ராயங்களையும் விருப்பங்களையும் தெரிவிப்பதற்கும் வழி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்தும் யூசர்களில், ஐஓஎஸ் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தும் நபர்களுக்கு ஏர்டெல் 5ஜி மற்றும் ஜியோ 5ஜி சேவைகள் அடுத்த வாரம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. 5ஜி சேவையை பெறுவதற்கு நம்மிடம் 5ஜி சேவையை சப்போர்ட் செய்யக்கூடிய ஸ்மார்ட்போன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் யூசர்கள் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும் அதில் 5ஜி வசதியை பயன்படுத்தக்கூடிய சாஃப்ட்வேர் வெர்ஷன்களை, அந்தந்த நிறுவனங்கள் இன்னும் முழுமையாக தயாரித்து வெளியிடவில்லை. எனவே பல மக்கள் 5ஜி போன்கள் வைத்திருந்தாலும் இன்னும் 5ஜி சேவைகளை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

  ஆனால் தற்பொழுது இந்தியாவில் இருக்கும் ஆப்பிள் ஐஓஎஸ் பீட்டா யூஸர்களுக்கு அடுத்த வாரம் முதல் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஆப்பிள் தரப்பு உறுதி செய்திருந்தாலும் எந்த தேதியில் 5ஜி அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதியாக தெரியவில்லை.

  5ஜி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்திய அரசாங்கம் அந்தந்த மொபைல் நிறுவனங்களிடம் 5ஜி சேவையில் சப்போர்ட் செய்யும் சாஃப்ட்வேர் அப்டேட்டுகளை விரைவாக தயாரிக்கும் படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஆப்பிள் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷனில் வெளியாக போகும் 5ஜி சேவை சோதனை முறையில் வெளியிடப்படவிருக்கிறது. இது அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு யூசர்கள் அளிக்கும் பின்னூட்டங்களை வைத்து, 5ஜி சேவையில் என்னென்ன மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று ஆப்பிள் தரப்பு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ட்விட்டருக்கு கம்பேக் கொடுக்கிறாரா ட்ரம்ப்? எலான் மஸ்க் கொடுத்த அதிரடி பதில்!

   சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் மொபைல் நெட்வொர்க் ப்ரொவைடர்களுடன் சேர்ந்து 5ஜி சேவையை விரைவில் அறிமுகப்படுத்த பாடுபட்டு வருவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. “நெட்வொர்க்கிற்கான தரம் மற்றும் செயல் திறன் ஆகியவற்றின் சோதனை முடிந்த பிறகு 5ஜி பயன்பாட்டிற்கு வரும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

  ஐஓஎஸ் பீட்டா சாஃப்ட்வேர் ப்ரோக்ராமில் இணைந்த ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தும் ஐபோன் யூஸர்கள், அடுத்த வாரம் வரப்போகும் புதிய அப்டேட்டிற்கு பிறகு தங்களது மொபைலில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். உலகம் முழுவதும் பரவலாக பயன்பாட்டிற்கு வருவதற்கு முன் சோதனை அடிப்படையில் 5ஜி சேவை பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் சாப்ட்வேரில் சில திருத்தங்களை செய்து அதன் பிறகு உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப் போவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  8.30% வரை வட்டி.. பிக்சட் டெபாசிட்டில் பணம் போட்டவர்களுக்கு அடித்தது யோகம்!

   மேலும் இந்த இடைப்பட்ட காலங்களில் 5ஜி சேவையில் யூஸர்கள் தங்களது அபிப்ராயங்களையும் விருப்பங்களையும் தெரிவிப்பதற்கும் வழி செய்யப்பட்டுள்ளது. 5ஜி சேவையை பயன்படுத்த விரும்பும் யூசர்கள் பீட்டா புரோகிராமில் இணைய வேண்டும். ஆனால் இது அனைவருக்கும் பொருத்தமானது அல்ல. ஏனெனில் சோதனை முறையில் வெளியிடப்படும் சாப்ட்வேர்கள் மற்றும் புதிய அப்டேட்டுகளில் பல குறைகள் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவை அனைத்தையும் தாண்டி 5ஜி புதிய அனுபவத்தை பெற விரும்புபவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Airtel, Apple