Home /News /technology /

21 ஆண்டுகளாய் கோலோச்சிய MP3 ப்ளேயருக்கு குட்பை... iPod உற்பத்தியை நிறுத்தியது ஆப்பிள்

21 ஆண்டுகளாய் கோலோச்சிய MP3 ப்ளேயருக்கு குட்பை... iPod உற்பத்தியை நிறுத்தியது ஆப்பிள்

apple ipod

apple ipod

Apple iPod | ஆப்பிள் கேஜெட்களில் மிகவும் பழமையான புராடக்ட்டான ஐபாட் உற்பத்தியை 21 ஆண்டுகளுக்கு பிறகு நிறுத்துகிறது ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கிய புராடக்ட்டான ஐபாட் இனி பயன்பாட்டில் இருக்க போவதில்லை என்கிற முடிவை ஆப்பிள் அறிவித்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் இனி ஐபாட்களை தயாரிக்க போவதில்லை என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் ஆப்பிள் ஸ்டோர்களில் ஐபாட்கள் இருக்கும் வரை நீங்கள் அவற்றை வாங்க முடியும் என்றும் கூறியுள்ளது. அக்டோபர் 23, 2001ல், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் ஐபாட்டை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.

இதை அறிமுகப்படுத்தியதில் இருந்து தற்போது வரை 21 ஆண்டு ஆகிறது. இது ஆப்பிள் கேஜெட்களில் மிகவும் பழமையானது. இதற்கடுத்து வெளிவந்த பல கேட்ஜெட்கள் நவீன தொழில்நுட்பத்துடன் வந்ததால், ஐபாட்டுக்கான மதிப்பு குறைந்து விட்டது. இப்போது இறுதியாக ஐபாட் விடைபெறுவதற்கான நேரமும் வந்துவிட்டது. எனவே ஆப்பிள் நிறுவனம் இனி ஐபாட்களை தயாரிக்க போவதில்லை என்று தெரிவித்தது. OG ஐபாட் 1,000 பாடல்கள் மற்றும் 10-மணி நேர பேட்டரியை சேமிக்கும் முதல் MP3 பிளேயர் ஆகும்.

20'ங்களில் பலர் ஆப்பிள் ஐபாட்டை அதிகம் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக இளைஞர்களின் பொக்கிஷமாக இந்த ஐபாட் இருந்து வந்தது. இப்போதெல்லாம் எப்படி நாம் ஸ்மார்ட் போனுடன் உறங்குகிறமோ, அதே போன்று அப்போதெல்லாம் ஐபாட் உடன் தான் பலர் தூங்கி வந்தனர். அந்த அளவிற்கு அவர்களின் வாழ்வில் ஆப்பிள் ஐபாட் மிக முக்கிய பங்கு வகித்து வந்தது. முதல் முதலாக "உங்கள் பாக்கெட்டில் 1,000 பாடல்கள்" என்கிற முழக்கத்துடன் ஆப்பிள் ஐபாட் வெளியிடப்பட்டது.



அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபாட், நவம்பர் 2001'இல் தான் விற்பனைக்கு வந்தது. ஐபாட்டை அறிமுகம் செய்த போது, தொழிற்நுட்ப வளர்ச்சி குறித்து பரவலாக பேசப்பட்டது. 2001-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபாட் கேட்ஜெட்டால் தான், வேகமாக சரிந்து கொண்டிருந்த வணிக நிலை காப்பாற்றப்பட்டது. முக்கியமாக, ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தை "வரலாற்றில் மிகவும் லாபகரமான நிறுவனமாக" மாற்றுவதற்கு இது உதவியது.

Also Read : ஐபோன் 13 மற்றும் மேக்புக் ஏர்: இந்தியாவில் இதைவிட கம்மி விலைக்கு விற்கப்பட்டதே இல்லை!

ஐபாட்டை அடுத்து, ஐபாட் மினி 2004 ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த ஐபாட் கேட்ஜெட் தான் இசை சந்தையில் ஆப்பிளின் ஆதிக்கத்தை வலுப்படுத்தியதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆப்பிள் நிறுவனம், ஐபாட்டின் உற்பத்தியை நிறுத்தியது குறித்து நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகின்றனர். அதில் பலரும் 'குட்-பை' என்பதை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளனர். மேலும் சிலர் தங்களது உணர்வு பூர்வமான அனுபவங்களையும் ட்வீட் செய்து வருகின்றனர்.



அதில் ஒருவர், "ஆப்பிள் ஐபாட் நான் வளர்ந்து வரும் காலங்களில் அன்புக்குரியவர்களில் ஒரு பகுதியாக இருந்தது. இது ஒரு புரட்சிகர தயாரிப்பு ஆகும், இதன் மூலம் இசை நம் அனைவரையும் கவர்ந்திழுத்தது, பயணத்தின்போது நல்ல உணர்வை தந்தது. குட்-பை மை பிரென்ட்" என்று உருக்கமாக குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இதே பலரும் ஐபாட்டிற்கு குட்-பை ட்வீட்களை தெரிவித்து வருகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Apple, Technology

அடுத்த செய்தி