• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • அக்டோபர் 15 முதல் விற்பனைக்கு வரும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 - ரூ.3,000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிப்பு!

அக்டோபர் 15 முதல் விற்பனைக்கு வரும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 - ரூ.3,000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிப்பு!

Apple watch series 7

Apple watch series 7

தற்போது அறிமுகமாகி இருக்கும் வாட்ச் சீரிஸ் 7 இதுவரை தயாரிக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச்களை விட மிகவும் நீடித்து உழைக்கும்

  • Share this:
அக்டோபர் 15 முதல் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 (apple Watch Series 7) விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வாட்ச் சீரிஸ் 7-க்கு அதிகாரப்பூர்வமாக கேஷ்பேக் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. HDFC டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7-ல் அறிமுகமாகி இருக்கும் எந்த வாட்சை வாங்கினாலும் ரூ.3000 கேஷ்பேக் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் HDFC கஸ்டமர் லோன்களில் 12 மாதங்கள் நோ-காஸ்ட்- இஎம்ஐ ஆப்ஷனும் உள்ளது. நம் நாட்டில் அலுமினியம் கேஸ் மற்றும் GPS கொண்ட பேஸ் 41 மிமீ மாடல் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7-ன் விலை ரூ.41,900ல் துவங்குகிறது. ரூ.41,900 என்ற விலையில் ஸ்டார்ட் ஆகும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 (41 மிமீ)-ன் விலை, நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகை மூலம் ரூ.38,900 என்ற விலைக்கு கிடைக்கும். இதே போல ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 45 மிமீ-ன் விலை ரூ. 44,900 -ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. HDFC கார்டுகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் கேஷ்பேக் ஆஃபரில் இந்த வாட்சை ரூ.41,900-க்கு வாங்கலாம்.

இதனிடையே ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 உடன் மிட்நைட், ஸ்டார்லைட், க்ரீன், நியூ ப்ளூ மற்றும் (ப்ராடக்ட்) ரெட் உட்பட5 புதிய அலுமினியம் கேஸ் ஃபினிஷ்களைளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது ஆப்பிள். தவிர ஆப்பிள் நிறுவனம் மேற்காணும் இரண்டு மாடல்களின் செல்லுலார் வேரியன்ட்டையும் இந்த விற்பனையின் போது அறிமுகப்படுத்துகிறது. இவற்றின் விலை முறையே ரூ.50,900 (41mm வேரியன்ட்) மற்றும் ரூ.53,900 (45mm வேரியன்ட்) ஆகும். மேலும் இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்ச் மாடல்கள் சில்வர், கிராஃபைட் மற்றும் கோல்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், டைட்டானியம் மற்றும் ஸ்பேஸ் பிளாக் டைட்டானியம் ஆகிய கலர்களில் ஆப்பிள் வாட்ச் எடிஷனுடன் கிடைக்கும்.

Also Read: ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல அனுமதி.. நவம்பர் 1ம் தேதி முதல் என்னென்ன தளர்வுகள்?

தற்போது அறிமுகமாகி இருக்கும் வாட்ச் சீரிஸ் 7 இதுவரை தயாரிக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச்களை விட மிகவும் நீடித்து உழைக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. ஏனெனில் வாட்ச் சீரிஸ் 7-ன் ஃபிரன்ட் கிரிஸ்டலானது முந்தைய வாட்ச் சீரிஸ்களை விட மிகவும் ஸ்ட்ராங்கானது மற்றும் விரிசலை எதிர்க்கும் தன்மை கொண்டது. எனவே எளிதில் உடையாது என்று கூறப்பட்டு இருக்கிறது. தவிர இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 ஆனது, IP6X சான்றிதழுடன் வரும் முதல் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ஆப்பிள் வாட்ச் ஆகும். மேலும் இந்த சீரிஸ் WR50 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங்கை கொண்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7-ல் காணப்படும் சில குறிப்பிடத்தக்க அம்சங்களில் எலெக்ட்ரிக்கல் ஹார்ட் சென்சார் மற்றும் ஈசிஜி App, பிளட் ஆக்ஸிஜன் சென்சார்/SpO2 சென்சார் உள்ளிட்டவை அடங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: