ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியாவை குறி வைத்த ஆப்பிள்.. ரீடைல் பணியாளர்களை வலைவிரித்து தேடும் நிறுவனம்!

இந்தியாவை குறி வைத்த ஆப்பிள்.. ரீடைல் பணியாளர்களை வலைவிரித்து தேடும் நிறுவனம்!

ரீடைல் கடை

ரீடைல் கடை

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ரீடைல் ஸ்டோர்களை தொடங்கவுள்ளதாக தெரிவித்த நிலையில் தற்போது அதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய வலைதளத்தில் ரீடைல் பணியாளர்களை பணியமர்த்துவதற்கான பல்வேறு புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ஆப்பிள் நிறுவனத்தின் பார்வை இந்தியாவின் மீது அதிக அளவில் விழ துவங்கியுள்ளது. சீனாவில் இருந்து தன்னுடைய உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவிற்கு மாற்றுவதில் இருந்து, தற்போது இந்தியாவில் ரீடைல் பணியாளர்களுக்கான பணியிடங்கள் முதல் இந்தியாவை குறி வைத்து பல்வேறு புதிய யுத்திகளை கையாண்டு வருகிறது. மேலும் இது போன்ற நடவடிக்கைகளால் கடைசியாக வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மிக அதிக அளவில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க கூடிய பக்கத்தில் இந்தியாவின் ரீடைல் பணியாளர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. அந்நிறுவனம். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பணியிடங்களை அந்தப் பக்கத்தில் பார்க்க முடிகிறது. இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு புதிய பல்வேறு பணியிடங்களுக்காக பணியாளர்களை தேர்வு செய்ய இருக்கிறது.

அதில் பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பிசினஸ் எக்ஸ்பர்ட், ஆப்பரேஷன் எக்ஸ்பர்ட், டெக்னிகல் ஸ்பெஷலிஸ்ட் போன்ற பல்வேறு நிலைகளில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உலக அளவில் வெற்றிநடை போட்டு வரும் டெக் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனம் நீண்ட காலமாகவே இந்தியாவில் தனது ரீடைல் ஸ்டோர்களை நிறுவுவதற்கான திட்டங்களை தீட்டி வந்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் அதிகரித்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றின் விற்பனையால் இன்னுமும் அதிக நம்பிக்கையோடு ஆப்பிள் ரீடைல் ஸ்டோர்களை அமைக்கும் பணியில் களமிறங்கியுள்ளது.

Also Read : செல்போனில் விளம்பரம் தொல்லையா? இதை செய்தாலே போதும்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!

இதன் காரணமாகத்தான் ரீடைல் ஸ்டோர்களை மிக தரமாக அமைப்பது பொருட்டு, பல்வேறு புதிய ரீடைல் ஸ்டோர் பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அந்நிறுவனம்.

ஒருவேளை ஆப்பிள் வெற்றிகரமாக தனது ரீடைல் ஸ்டோர்களின் எண்ணிக்கையை அதிகரித்து மிக அதிக அளவில் தனது ஸ்டோர்களை அமைக்கும் பட்சத்தில் இந்தியாவில் தற்போது வளர்ந்து வரும் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெக் கேட்ஜெட்டுகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகப்பெரும் போட்டியாக இருக்கும் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும்.

ஏற்கனவே ஆப்பிளின் ஐபோன் பாகங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு அவற்றை ஒன்று சேர்க்கும் வேலை நடந்து வரும் நிலையில், ஆப்பிளின் இந்த புதிய செயல்பாடு அந்நிறுவனத்திற்கு எந்த வகையில் கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

First published:

Tags: Apple, Jobs