• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஆப்பிள் கேட்ஜெட்களை துடைக்க பிரத்யேக துணி அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

ஆப்பிள் கேட்ஜெட்களை துடைக்க பிரத்யேக துணி அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

 ‘கிளீனிங் கிளாத்’

‘கிளீனிங் கிளாத்’

சமீபத்தில் தான் ஆப்பிள் புதிய ஐஃபோன் வெர்ஷனை வெளியிட்டது. அதை அடுத்து, பலரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, ஆப்பிள் நிறுவனம் ரெண்டு அதி நவீன M1 சிலிகான் சிப்செட்கலை வெளியிட்டுள்ளது.

  • Share this:
ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 18 அன்று தனது புதிய தயாரிப்புகளை அந்நிறுவனத்தின் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது. மேக்புக் புக் ப்ரோ, ஐபாட் 3, உள்ளிட்ட நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த தயாரிப்புகள் ‘unleashed’ ஈவன்ட்டில் அறிமுகமாகின. பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஆப்பிள் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்ட அதே நிகழ்வில், யாருமே எதிர்பார்க்காத விதத்தில் மற்றொரு தயாரிப்பும் அறிமுகமானது. அதன் விலை ரூ. 1900 மட்டுமே! ஆனால் இவ்வளவு குறைவான விலையில் ஆப்பிள் எந்த தயாரிப்பை வழங்குகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறதா?

அந்த ரூ. 1900 மதிப்புள்ள பொருள், சுத்தம் செய்யும் துணி. ஆப்பிள் நிறுவனம், தன்னுடைய உயர் ரக, நவீன தயாரிப்புகளை சுத்தம் செய்ய மிருதுவான, மென்மையான துணியை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும், பேப்பர் டவல், துண்டுகள் அல்லது பழைய துணிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளது. கூறியதோடு மட்டுமல்லாமல், ஆப்பிள் தனித்துவமான ஒரு ‘கிளீனிங் கிளாத்’ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள ‘கிளீனிங் கிளாத்’ பார்ப்பதற்கு பளபளவென்று இருக்கிறது. இந்தத் துணியைப் பயன்படுத்தி, ஆப்பிளின் எந்த சாதனங்களை எல்லாம் துடைக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த சுத்தம் செய்யும் துணியைப் பயன்படுத்தி, நீங்கள் ஆப்பிள் தயாரிப்புகளின், நான்-டெக்ஸ்ச்சர் கண்ணாடி கொண்ட டிஸ்ப்ளேக்கள, எந்த வித சேதமும் ஏற்படாமல் துடைத்து, துல்லியமான டிஸ்ப்ளே திரையைப் பெறலாம்.

சமீபத்தில் தான் ஆப்பிள் புதிய ஐஃபோன் வெர்ஷனை வெளியிட்டது. அதை அடுத்து, பலரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, ஆப்பிள் நிறுவனம் ரெண்டு அதி நவீன M1 சிலிகான் சிப்செட்கலை வெளியிட்டுள்ளது. அதே போல, மேக்புக் ப்ரோவும் இரண்டு மாடல்களில் வெளியாகியுள்ளன. M1 ப்ரோ மற்றும் M1 மேக்ஸ் சிப்ஸ் பயன்படுத்தும், 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களில் கிடைக்கின்றன. பயன்படுத்தப்பட்டுள்ள சிப்செட்டின் அடிப்படையில், மேக்புக்கின் ஆரம்ப விலை ரூ. 1,94,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல்களின் அதிகபட்ச விலை, ரூ. 3,29,900 என்று வெளியிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மூன்றாம் தலைமுறை ஐபாடும் இந்த வெளியீட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தன்னுடைய மியூசிக் ரசிகர்களுக்கு, ஹோம்பாட் மினி ஸ்பீக்கர்கள் மற்றும் புதிய வாய்ஸ் பிளானையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Also read... அசத்தலான அம்சங்களுடன் வரும் ‘ரெட்மி நோட் 11 சீரிஸ்’ - அக்டோபர் 28ல் வெளியீடு!

ஆயிரங்கள் மற்றும் லட்சங்களில் செலவு செய்து நீங்கள் வாங்கும் ஆப்பிள் சாதனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் அல்லவா. ஏதோ ஒரு துணியை எடுத்து நுட்பமான டிஸ்ப்ளேக்களை கிளீன் செய்வது சரியல்ல. நீங்கள் ஆப்பிள் சாதனங்கள் வைத்திருந்தால், ரூ. 1900 செலவழித்து இந்த தனித்துவமான ‘கிளீனிங் கிளாத்’ வாங்க முடிவு செய்தால், நீங்கள் ஆப்பிளின் ஆதிகாரபூர்வமான வலைதளத்துக்கு சென்று ஆர்டர் செய்யலாம்.

இப்போது ஆர்டர் செய்தால், உங்களுக்கு எட்டு முதல் பத்து நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும். அதாவது, நவம்பர் 1ம் தேதிக்குள் ஆப்பிள் ‘கிளீனிங் கிளாத்’ உங்கள் கையில் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: