ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஆண்ட்ராய்டு யூசர்களே எச்சரிக்கை! இந்த 4 ஆப்ஸை உங்கள் மொபைலில் இருந்து உடனே நீக்கி விடுங்கள்!

ஆண்ட்ராய்டு யூசர்களே எச்சரிக்கை! இந்த 4 ஆப்ஸை உங்கள் மொபைலில் இருந்து உடனே நீக்கி விடுங்கள்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மொபைல் சாதனம் பூட்டப்பட்டிருந்தாலும், குரோம் பிரவுசரானது பின்னணியில் இயங்கிக் கொண்டே இருக்கும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இன்றைய கால கட்டத்தில் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பத்தால் இயங்கும் இன்றைய உலகில், சமீபத்திய தொழில்நுட்பப் போக்குகளைப் பற்றி தெரிந்துகொள்ளும் மக்கள் தாங்கள் பயன்படுத்தும் செயலிகள், இணையதளங்கள் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இன்று எண்ணற்ற தீங்கிழைக்கும் செயலிகள் உலவி கொண்டிருக்கின்றன.

  இது எப்போது ஒருவரின் மொபைலில் இருந்தாலும் ஆபத்தான செயல்பாடுகளை செய்ய கூடியது. அதாவது உங்களின் தனிப்பட்ட விவரங்களை திருடி கொண்டு, அதன்மூலம் பணம் சம்பாதிக்க பறிக்கவும் கூடும். சமீபத்தில் சைபர் செக்யூரிட்டி சேவை வல்லுநர்கள் மால்வேர் பைட்ஸ் வைரஸ்களால் பாதிக்கப்பட்ட கூகுள் பிளே ஸ்டோர் ஆப்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

  இது குறித்த பதிவில், டெவலப்பர் மொபைல் ஆப்ஸ் குழுவிலிருந்து தீங்கிழைக்கும் செயலிகளின் பட்டியல் கூகுள் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நான்கு செயலிகளும் தீங்கான நடத்தையை சிறிது நேரம் மறைத்து, இறுதியில் ஃபிஷிங் தளங்களை குரோமில் திறக்கத் தொடங்கும். இந்த ஆப்களை பற்றியும், இதை எப்படி நீக்குவது பற்றியும் இனி தெரிந்து கொள்ளலாம்.

  ஹரியானாவின் MET சிட்டியில் மிகப்பெரிய உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் நிஹான் கோஹ்டன்

  நீக்க வேண்டிய 4 ஆப்ஸ்

  புளூடூத் ஆட்டோ கனெக்ட், புளூடூத் ஆப் செண்டர், டிரைவர்: புளூடூத், USB, Wi-Fi, மொபைல் ட்ரான்ஸ்பர்: ஸ்மார்ட் சுவிட்ச் ஆகிய 4 செயலிகள் உங்கள் மொபைலில் இருந்தால் உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்து விடுங்கள். மேற்குறிப்பிட்ட வலைப்பதிவின் அறிக்கைபடி, இந்த செயலிகளை சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இந்தப் செயலிகளின் பழைய பதிப்புகள் ஏற்கனவே Android/Trojan.HiddenAds இன் வெவ்வேறு மாறுபாடுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன என்று அதில் கூறியுள்ளனர்.

  இந்த செயலிகள் எப்படி வேலை செய்கிறது?

  இந்த செயலிகள் உங்களின் மொபைலில் தீமையான நடத்தையை காட்டத் தொடங்கும் முன் மொபைலில் மறைந்திருக்கும் என்று கூறுகின்றனர். இப்படி சிறிது காலம் மறைந்திருப்பதற்கு காரணம், மால்வேர் டெவலப்பர்களால் இதை கண்டறிவதைத் தவிர்ப்பதற்கான பொதுவான தந்திரமாகும். ஆரம்ப தாமதத்திற்கு பிறகு, இந்த செயலிகள் குரோம் பிரவுசரில் ஃபிஷிங் தளங்களைத் திறக்கும். இருப்பினும், இந்த ஃபிஷிங் வலைத்தளங்களின் உள்ளடக்கமானது மாறுபடும். இவை யூசர்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆபத்தான தளங்களாகும்.

  ட்விட்டர் பணியாளர்கள் முன்னறிவிப்பு இன்றி வேலை நீக்கம்: வழக்கு பாய்கிறது

   இவற்றில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மொபைல் சாதனம் பூட்டப்பட்டிருந்தாலும், குரோம் பிரவுசரானது பின்னணியில் இயங்கிக் கொண்டே இருக்கும். யூசர் தனது சாதனத்தை திறக்கும்போது, ​​சமீபத்திய தளத்துடன் குரோம் பிரவுசரும் திறக்கும்.

  எனவே, நீங்கள் இந்த செயலிகளில் ஏதேனும் ஒன்றை உங்கள் மொபைலில் வைத்திருந்தால், அவற்றை உங்களின் ஸ்மார்ட்போன்களில் இருந்து அகற்றுவது நல்லது. மேலும், எப்போது ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தாலும், அது எப்படிப்பட்ட செயலி, உங்கள் மொபைலுக்கு தீங்கு ஏற்படுத்துமா, தனிப்பட்ட விவரங்களை திருடுமா என்பதையெல்லாம் எப்போதும் சரிபார்க்க வேண்டும் என்று சைபர் செக்கியூரிட்டி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Mobile phone, Mobile Phone Users