ஆன்ட்ராய்டு பயணாளர்கள் இனி தங்களின் செல்போன்களில் உள்ள ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் மூலம் கால்களை ரெக்கார்டு செய்யும் வசதியை மேற்கொள்ள முடியாது. கூகுள் நிறுவனம் இனி மூன்றாம் தரப்பு அதாவது third party கால் ரெக்கார்டிங்கை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதற்காக புதிய விதியை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
அதன்படி, இனி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அனைத்து கால் ரெக்கார்டிங் அப்ளிகேஷன்களும் வரும் மே 11ஆம் தேதி முதல் தடை செய்யப்படும். அதேபோல் தற்போது போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள இதுபோன்ற அப்ளிகேஷன்கள் வேலை செய்யாது. எனவே, இனி பயணாளர்கள் தங்களின் செல்போனில் உள்ள பில்ட் இன் கால் ரெக்கார்டிங் வசதியை மட்டுமே பயன்படுத்த முடியும். உங்கள் போனில் அவ்வாறு பில்ட் இன் கால் ரெக்கார்டிங் வசதி இல்லை என்றால் இனி மே 11ஆம் தேதிக்குப் பின் கால் ரெக்கார்டு செய்ய முடியாத சூழல் ஏற்படலாம்.
இதையும் படிங்க:
Whatsapp-ன் புதிய அசத்தல் அப்டேட்... மற்றவர்களுக்கு தெரியாமல் நீண்ட நேரம் பயன்படுத்தலாம்
தற்போது ட்ரூ காலர் போன்ற கால் ரெக்கார்டிங் அப்ளிகேஷன்கள் ஆன்ட்ராய்டு போன்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற செயலிகள் கால் ரெக்கார்டிங் வசதிக்கு பயன்படுத்தும் அதேவேளை, செல்போன்களின் API தரவுகளை இவை ட்ராக் செய்கின்றன. இதன் மூலம் பயனாளர்களின் ப்ரைவசி மற்றும் டேட்டா பாதுகாப்பு கேள்விகுறியாகின்றன. குறிப்பாக இந்த செயலிகளை பலர் துஷ்பிரயோகம் செய்து வருவதாக பல புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து இந்த விதி மாற்றத்தை கூகுள் நிறுவனம் தற்போது மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக ட்ரூகாலர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "நாங்கள் ஆன்ட்ராய்டு போன்களில் உருவாக்கியுள்ள கால் ரெக்கார்டிங் வசதி வாடிக்கையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கால் ரெக்காராடிங் வசதி அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் நிலையில், API பயன்பாடு வாடிக்கையாளர்களின் அனுமதி கொண்டே மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் கூகுள் நிறுவனத்தின் புதிய விதியால் இனி கால் ரெக்கார்டிங் வசதியை தர முடியாமல் போகலாம்" என தெரிவித்துள்ளார்.
சாம்சங்க், ஒன்பிளஸ், ஓப்போ, சியோமி உள்ளிட்ட பெரும்பாலான செல்போன் பிராண்டுகளும் தங்களின் பில்ட் இன் கால் ரெக்கார்டிங் வசதிகளை போன்களில் வழங்குகின்றன. இவை அனைத்தும் மே 11ஆம் தேதிக்கு பின்னரும் எந்த வித சிக்கலும் இன்றி செயல்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.