• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • நீங்க ஆண்ட்ராய்டு மொபைல் யூஸ் பண்றீங்களா? அப்போ இந்த 'ஜோக்கர்' வைரஸ் கிட்ட இருந்து தப்பிச்சிடுங்க!

நீங்க ஆண்ட்ராய்டு மொபைல் யூஸ் பண்றீங்களா? அப்போ இந்த 'ஜோக்கர்' வைரஸ் கிட்ட இருந்து தப்பிச்சிடுங்க!

ஆண்ட்ராய்டு ஆப்கள்

ஆண்ட்ராய்டு ஆப்கள்

பல வகையான டிஜிட்டல் வைரஸ்கள் இருந்தாலும், அவற்றில் சில மிக மோசமானதாக கருதப்படுகிறது. இந்த வகையை சேர்ந்தது தான் 'ஜோக்கர்' வைரஸ்.

  • Share this:
தொழில்நுட்பம் ஒரு புறம் விண்ணை தொடும் அளவிற்கு வளர்ந்து வந்தாலும், அதை வைத்து சிலர் பாதகமான செயல்களை செய்து ஏராளமான பணம் சம்பாதித்து வருகின்றனர். குறிப்பாக கம்பியூட்டர், ஸ்மார்ட் போன் போன்ற சாதனங்களை பயன்படுத்தும் எளிய மக்களை ஏமாற்றுவதற்காகவே ஒரு பெரிய மோசடி ஹேக்கர்கள் கும்பல் உள்ளது. தவறாக வேலை செய்யும் வைரஸை உருவாக்கி அதை நமது கம்பியூட்டர், ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்றவற்றில் செலுத்தி நம்முடைய முக்கிய தரவுகளை நம் அனுமதி இல்லாமல் கைப்பற்றி அதை வைத்து கோடி கணக்கில் பணத்தை மோசடி செய்து வருவார்கள்.

பல வகையான டிஜிட்டல் வைரஸ்கள் இருந்தாலும், அவற்றில் சில மிக மோசமானதாக கருதப்படுகிறது. இந்த வகையை சேர்ந்தது தான் 'ஜோக்கர்' வைரஸ். இது உங்களின் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள ஆண்ட்ராய்டு செயலிகளில் நேரடியாக ஊடுருவி உங்களுடைய முக்கிய மெசேஜ்கள், ஓடிபி, பாஸ்வேர்டு, ஸ்மார்ட்போன் பற்றிய பிற தகவல்கள் ஆகியவற்றை உங்களுக்கு தெரியாமலே எடுத்துவிடும்.

இந்த வருட ஜுலையில் ஜோக்கர் வைரஸ் சிலரின் ஸ்மார்ட்போன் செயலிகளில் இருப்பதாக கண்டறிந்தனர். அப்போதே அந்த செயலிகளை கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி விட்டனர். மீண்டும் இந்த ஜோக்கர் வைரஸ் சில குறிப்பிட்ட 14 செயலிகளில் ஒளிந்திருப்பதாக, காஸ்பர்ஸ்கி லேப்ஸின் ஆண்ட்ராய்டு மால்வேர் ஆய்வாளர் டாட்டியானா ஷிஷ்கோவா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மிக மோசமான வைரஸ் என்று கூறப்படும் இந்த 'ஜோக்கர்' வைரஸ் மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரின் சில செயலிகளில் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் மீண்டும் தோன்றியுள்ள இந்த ஜோக்கர் வைரஸ், யூசர்களின் முக்கிய தரவுகளை திருடி கொண்டு, அதை வைத்து தவறான செயல்பாடுகளை செய்ய கூடும் என்று டாட்டியானா குறிப்பிட்டுள்ளார்.

Also read... இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ள Moto-வின் புத்தம் புதிய 3 ஸ்மார்ட் ஃபோன்கள்!

எனவே தற்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் எல்லோரும் தங்களது மொபைலில் கீழே குறிப்பிட்டுள்ள இந்த 14 செயலிகளில் ஏதேனும் ஒன்று உள்ளனவா என்று பரிசோதித்து கொள்ளுங்கள். அப்படி அவை இருந்தால் உடனடியாக அவற்றை அன்-இன்ஸ்டால் செய்து விடுங்கள்.

1. ஸ்மார்ட் டிவி ரிமோட் ஆப்
2. ஈஸி பிடிஎஃப் ஸ்கேனர் ஆப்
3. வால்யூம் பூஸ்டர் லவ்டர் சவுண்ட் ஈகுவலைசர்
4. ஃபிளாஷ்லைட் ஃபிளாஷ் அலர்ட் ஆன் கால்
5. வால்யூம் பூஸ்டரிங் ஹியரிங் எயிட்
6. பேட்டரி சார்ஜிங் அனிமேஷன் பப்பில் எஃபெக்ட்
7. நவ் QR கோடு ஸ்கேன்
8. சூப்பர்-கிளிக் விபிஎன்
9. பேட்டரி சார்ஜிங் அனிமேஷன் வால்பேப்பர்
10. கிளாசிக் எமோஜி கீபோர்டு
11. டாஸ்லிங் கீபோர்டு
12. எமோஜி ஒன் கீபோர்டு
13. ஹாலோவீன் கலரிங்
14. சூப்பர் ஹீரோ எஃபெக்ட்

முதன்முதலில் இந்த ஜோக்கர் வைரஸ் 2017 ஆம் ஆண்டில் ஆண்ட்ராய்டு செயலிகளில் தோன்றியது. 2019 ஆம் ஆண்டு இந்த ஜோக்கர் வைரஸை எப்படி நீக்க வேண்டும் என்று பல கட்டுரைகள் வெளியாகின. 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் தோன்றிய இந்த ஜோக்கர் வைரஸ், சில செயலிகளில் இருந்துள்ளது. அவற்றை கூகுள் நிறுவனம் சமீபத்தில் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: