Home /News /technology /

உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனை ஸ்மார்ட்டாக பயன்படுத்த உதவும் 5 டிப்ஸ்கள்!

உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனை ஸ்மார்ட்டாக பயன்படுத்த உதவும் 5 டிப்ஸ்கள்!

ஆண்ட்ராய்டு ஃபோனை ஸ்மார்ட்டாக பயன்படுத்த உதவும் 5 டிப்ஸ்கள்

ஆண்ட்ராய்டு ஃபோனை ஸ்மார்ட்டாக பயன்படுத்த உதவும் 5 டிப்ஸ்கள்

Android top tricks : ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களே மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. சிலர் ஆண்ட்ராய்டு ஃபோன்களை சிறப்பான முறையில் பயன்படுத்தி வந்தாலும், பலர் அதிலிருக்கும் சில ட்ரிக்குகளை பெரிதாக பயன்படுத்தாமல் அதன் பலன்களை முழுமையாக பெற மாட்டார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
மக்களிடையே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் ஸ்மார்ட் ஃபோன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களே மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. சிலர் ஆண்ட்ராய்டு ஃபோன்களை சிறப்பான முறையில் பயன்படுத்தி வந்தாலும், பலர் அதிலிருக்கும் சில ட்ரிக்குகளை பெரிதாக பயன்படுத்தாமல் அதன் பலன்களை முழுமையாக பெற மாட்டார்கள்.

அடிப்படை செயல்பாடுகளை பற்றி மட்டுமே அறிந்து வைத்து கொண்டு ஆண்ட்ராய்டு ஃபோன்களை பயன்படுத்தி கொண்டிருப்பார்கள். இந்த பட்டியலில் நீங்களும் இருக்கலாம். உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோனிலிருந்து அதிக பலன்களைப் பெற உதவும் சில வழிகளை இந்த செய்தியில் பார்க்கலாம். ஆனால் இந்த அம்சங்களில் சிலவற்றை முயற்சிக்க உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 11 வெர்ஷனை கொண்டிருக்க வேண்டும்.

2 ஆப்ஸ்களை ஒரே நேரத்தில்..

ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் (Android 7.0 Nougat) வெர்ஷன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்சம் உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் 2 ஆப்ஸ்களை ஒரே நேரத்தில் ஒன்றாக இயக்க உதவுகிறது. இந்த முறை வெவ்வேறு ஆண்ட்ராய்டு ஸ்கின்களுடன் மாறுபடும் ஆனால் அடிப்படை செயல்முறை ஒன்று தான். மல்ட்டி டாஸ்கிங் செய்ய விரும்பும் போது இந்த அம்சம் மிகவும் கைகொடுக்கும்.

நீங்கள் ஒரு App-ஐ ஓபன் செய்திருக்கும் போது, "Recents" மல்ட்டி டாஸ்கிங் பட்டனை க்ளிக் செய்யவும் அல்லது மேலே ஸ்வைப் செய்து அழுத்திப் பிடிக்கவும். நீங்கள் சமீபத்தில் பயன்படுத்திய Apps-களில் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்து, அதை டிஸ்பிளேயின் மேல் அல்லது இடதுபுறமாகப் பிடித்து இழுத்து, அதன் அருகில் அல்லது கீழ் தோன்றும் மற்றொரு ஓப்பனில் இருக்கும் App-ஐ தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் 2 ஆப்ஸ்கள் ஒன்றாக இயங்கும்.

ALSO READ |  5ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தயாராகுங்கள் - சாம்சங் 5ஜி சீரிஸ் லிஸ்ட் இதோ!

Nearby Sharing மூலம் ஃபைல்ஸ்கள் ஷேரிங்..

ஆப்பிளின் ஏர் டிராப் போன்ற ஒரு அம்சத்தை ஆண்ட்ராய்டு 11 உடன் கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. 2 ஆண்ட்ராய்டு டிவைஸ்களிலும் Nearby Sharing எனேபிள் செய்திருந்தால், பெரிய ஃபைல்ஸ்கள் மற்றும் டேட்டாக்களை விரைவாக ஷேர் செய்து கொள்ள முடியும். இந்த ஆப்ஷன் ஆண்ட்ராய்டு 11 உள்ள டிவைஸ்களில் மட்டுமே வேலை செய்யும். Quick Settings சென்று இதனை எனேபிள் செய்து கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் ஷேர் செய்ய விரும்புவதை கேலரி அல்லது ஃபைல் மேனேஜர் சென்று செலக்ட் செய்து அதனை ஷேர் செய்யும் ஆப்ஷன்களில் Nearby Sharing-ஐ தேர்வு செய்ய வேண்டும்.

ஸ்மார்ட் டிவைஸ்களில் கேஸ்ட் ..

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோனில் இருக்கும் Cast ஆப்ஷனை பயன்படுத்தி Android TV மற்றும் Wi-Fi நெட்வொர்க் மூலம், உங்கள் யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் வீடியோக்களை Cast பட்டன் மூலம் ஷேர் செய்யலாம். தவிர கூகுள் அசிஸ்டண்ட் மூலம் இயங்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கரை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் ஃபோனில் இருந்து நேரடியாக ஆடியோவை ஸ்ட்ரீம் செய்யலாம்.

ALSO READ |  Whatsapp-ல் இப்படி எல்லாம் ஒரு ஆப்ஷன் இருக்குனு நமக்கு தெரியாம போச்சே..!

ஃபோக்கஸ் மோட் (Focus mode)..

நீங்கள் வேலையில் பிஸியாக இருக்கும் போது சோஷியல் மீடியா ஆப்ஸ் மற்றும் பிற ஆப்ஸ்களின் நோட்டிஃபிகேஷன்கள் தொந்தரவு செய்து உங்களை கவனத்தை சிதறடிக்கிறதா.! Do Not Disturb-ன் கிளாரிஃபைட் வெர்ஷன் தான் இந்த ஃபோக்கஸ் மோட். இந்த அம்சம் குறிப்பிட்ட ஆப்ஸ்களின் நோட்டிஃபிகேஷன்களை ஸ்டாப் செய்கிறது. இந்த மோட் எனேபிளில் இருக்கும் போது சில ஆப்ஸ்களை பயன்படுத்த முடியாது. எனவே, நீங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கும் போது கவனத்தை சிதறடிக்கும் ஆப்ஸை தற்செயலாக திறக்க முடியாது.

பெட்டைம் மோட்..

இந்த மோட் உங்கள் மொபைலை standby-யில் வைக்க அனுமதிக்கிறது. எல்லா ஆப்ஸ்களும் மற்றும் சர்விஸ்களும் ம்யூட் செய்யப்பட்டிருக்கும். மேலும் நீங்கள் தூங்கு போது ஃபோனை பயன்படுத்துவதை தடுக்க மொபைல் ஸ்கிரீன் பிளாக் அண்ட வொயிட் மோடிற்கு செல்கிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Android, Smart Phone

அடுத்த செய்தி