Home /News /technology /

இனிவரும் காலங்களில் சிம் கார்டு ஸ்லாட் இல்லாத ஃபோன்கள் - இதற்கான காரணம் தெரியுமா.?

இனிவரும் காலங்களில் சிம் கார்டு ஸ்லாட் இல்லாத ஃபோன்கள் - இதற்கான காரணம் தெரியுமா.?

android sim slot

android sim slot

Android Phones | இந்த தொழில்நுட்பத்தை ஐஓஸ் மற்றும் விண்டோஸ் போன்ற பிற தளங்களுக்கும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில், ஸ்மார்ட்போன்களில் சிம் ஸ்லாட் என்பது இல்லாத நிலை ஏற்படுவதால் அவற்றின் திறனும் மாறுபடலாம். இது முன்பை காட்டிலும் சிறப்பாக செயல்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
கால மாற்றத்திற்கு ஏற்ப நம்மை சுற்றி உள்ள பல வகையான விஷயங்கள் மாறி கொண்டே வருகிறது. ஒரு காலத்தில் கணினியை ஒரு பெரிய ரூம் அளவிற்கு தயார் செய்து பயன்படுத்தி வந்தோம். ஆனால், இன்று அந்த கணினி செய்த பல விஷயங்களை சில நொடிகளில் நமது கையில் உள்ள ஸ்மார்ட்போன் மூலம் நம்மால் செய்ய முடிகிறது. கிட்டத்தட்ட இந்த உலகமே நமது கைக்குள் அடங்கியது போன்ற உணர்வை இந்த ஸ்மார்ட்போன்கள் தருகின்றன.

இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில் பல வித மாற்றங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. மொபைலின் திறன், சார்ஜிங், பேட்டரி, கேமிரா, அளவு போன்ற பல அம்சங்கள் புதுப்புது மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சிம் கார்டு ஸ்லாட் இல்லாத முறையில் போன்களை வடிவமைக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நிச்சயம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த கூடிய செய்தியாகும்.

இந்த புதிய அறிக்கைகளின்படி, ஆண்ட்ராய்டு 13-இல் இரண்டு மொபைல் நெட்வொர்க்குகளை பயன்படுத்த கூடிய 2 ஸ்லாட்கள் நீக்கம் செய்யப்படலாம். சிம் ஸ்லாட்டை நீக்குவதன் மூலம், ஃபோன் உற்பத்தியாளர்களுக்கு ஒரு பெரிய பேட்டரியை அந்த இடத்தில் வடிவமைப்பதற்கு இதை பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது ஸ்மார்ட்போன்களில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டின் வடிவமைப்பானது இதற்கடுத்து மாற்றம் பெறலாம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.



ஆண்ட்ராய்டு 13 கோடுகள், பல இயக்கப்பட்ட சுயவிவரங்கள் (Multiple Enabled Profiles) எனப்படும் ஒரு சிறப்பம்சத்தைக் கொண்டிருக்கலாம். இந்த புதிய வசதியானது இரண்டு சிம் நெட்வொர்க்குகளை இயக்குவதை சாத்தியமாக்குகிறது. இந்த வழியை பயன்படுத்தி, இரண்டு வெவ்வேறு சிம் கார்டுகளை உபயோகிக்க முடியும். எனவே ஒரே போனில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரு வேறு நெட்வொர்க்கையும் இயக்க முடியும்.

Also Read : ஆண்டிராய்டு யூஸர்களின் விவரங்களை திருடிய கூகுள்..

இந்த அனைத்து வழிகளின் மூலம் ஃபோன் உற்பத்தியாளர்கள் சிம் கார்டு ஸ்லாட்டை அகற்றுவது பற்றி யோசிக்கலாம் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டுகின்றன. சிம் கார்டு இல்லாத ஸ்மார்ட்போன்களின் எதிர்காலத்தை பிக்சல் ஹார்டுவேர் ப்ரோடோடைப் மூலம் கூகுள் நிறுவனமானது சோதிக்கத் தொடங்கி உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்த தனித்துவமான அம்சமானது ஆண்ட்ராய்டு 13-இல் வரக்கூடும் என்று இந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

Also Read : 34 வயது நபரின் உயிரைக் காத்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்...

அதே வேளையில், இந்த தொழில்நுட்பத்தை ஐஓஸ் மற்றும் விண்டோஸ் போன்ற பிற தளங்களுக்கும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில், ஸ்மார்ட்போன்களில் சிம் ஸ்லாட் என்பது இல்லாத நிலை ஏற்படுவதால் அவற்றின் திறனும் மாறுபடலாம். இது முன்பை காட்டிலும் சிறப்பாக செயல்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியானது இது போன்ற பல வகையான மாற்றங்களை எதிர் காலத்தில் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இது நல்ல முறையில் அமைய வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் முக்கிய எண்ணமாக இருக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Android, Technology

அடுத்த செய்தி