ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஆண்ட்ராய்டு மொபைல் யூசர்களே… இந்த 5 புதிய அப்டேட்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆண்ட்ராய்டு மொபைல் யூசர்களே… இந்த 5 புதிய அப்டேட்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்தப்படாத செயலிகளின் தனியுரிமை அனுமதிகள் அகற்றப்படும்.

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்தப்படாத செயலிகளின் தனியுரிமை அனுமதிகள் அகற்றப்படும்.

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்தப்படாத செயலிகளின் தனியுரிமை அனுமதிகள் அகற்றப்படும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அவ்வப்போது புது புது அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். முன்பிருந்த சில பிழைகளை சரிசெய்து புது அப்டேட்டடாக இவற்றில் வெளியிடுவார்கள். அல்லது வேறு சில சிறப்பம்சங்களை சேர்த்து அப்டேட்டாக தருவார்கள். அந்த வகையில் பேமிலி பெல்ஸ் முதல் புது எமோஜி வரை சில புதிய சிறப்பம்சங்களை சேர்த்து வெளியிட உள்ளனர். அதுவும் இந்த புதிய அப்டேட்கள் கூகுள் பிக்சல் 6, கூகுள் பிக்சல் 6 ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்சி S21 சீரிஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களில் முதன்முதலில் செயல்பட உள்ளது. இந்த அப்டேட்கள் முழுவதையும் இந்த பதிவில் விரிவாக பாப்போம்.

டிஜிட்டல் கார் கீஸ்:

இனி கூகுள் பிக்சல் 6 மற்றும் சாம்சங் கேலக்சி S21 சீரிஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் தங்களின் ஆண்ட்ராய்டு மொபைலை கொண்டே கார்களை அன்லாக் செய்யலாம். இந்த வசதி தற்போது குறிப்பிட்ட BMW கார்களில் வேலை செய்யும். மேலும் எதிர் காலத்தில் தயாரிக்கப்படும் பல மாடல் கார்களுக்கும் இந்த டிஜிட்டல் கார் கீ வசதி சேர்க்கப்படும்.

எமோஜி கிச்சன்:

தற்போது வெளி வரவுள்ள இந்த அப்டேட்டில் உங்களுக்கு பிடித்த 2 எமோஜிகளை சேர்த்து நீங்களே புது எமோஜி ஒன்றை உருவாக்கி அதை பிறருக்கு பகிரலாம். இதற்கு ஜிபோர்டு டெக்ஸ்ட் பாக்ஸில் உள்ள ஏதேனும் 2 எமோஜியை டைப் செய்தால் போதும்; இவற்றை மிக்ஸ் செய்து புது எமோஜி ஒன்றை இந்த ஜிபோர்டு மூலம் பெறலாம். இந்த சிறப்பம்சம் ஜிபோர்டு பயன்படுத்தும் எல்லா யூசர்களுக்கும் விரைவில் வரவுள்ளது. இது நிச்சயம் சிறப்பான அப்டேட்டாக இருக்கும்.

Also Read | இரண்டு வண்ணங்களில் விண்டேஜ் தோற்றத்தில் அறிமுகமான கவாஸாகியின் புதிய பைக்! விலை எவ்வளவு தெரியுமா?

செயலி அனுமதிகள்:

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்தப்படாத செயலிகளின் தனியுரிமை அனுமதிகள் அகற்றப்படும். இவை இந்த புது அப்டேட்டில் வரவுள்ளது. மேலும் நீங்கள் மீண்டும் அனுமதிகளை அந்த செயலிகளுக்கு வழங்க, அவற்றை மீண்டும் திறந்து அனுமதி என்கிற ஆப்ஷனை தந்தால் போதும்.

கூகுள் போட்டோ, விட்ஜெட்ஸ் & மெமரிஸ்:

உங்களின் ஹோம்ஸ்கிரீனில் புதிய விட்ஜெட்களுடன் கூகுள் போட்டோ வரவுள்ளது. இவற்றில் பீப்புள் மற்றும் பெட்ஸ் (People and Pets widget) என்று இரு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்தால் போதும், அதுவே உங்கள் ஹோம்ஸ்கிரீன் மற்றும் விட்ஜெட்டில் உங்களின் தேர்வுக்கு ஏற்ப வைத்துவிடும்.அதே போன்று உங்களின் மெமரிக்கு ஏற்ப போட்டோ மற்றும் வீடியோக்கள் சேர்க்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

ஃபேமிலி பெல்ஸ்:

ஆப்பிள் மொபைல்களில் இருப்பது போன்று உங்களின் குடும்ப உறுப்பினர்களின் அழைப்புகளுக்கு ஃபேமிலி பெல்ஸ் என்கிற ஆப்ஷனை நீங்கள் வைத்து கொள்ளலாம். ஒருவேளை உங்கள் வீட்டில் ஸ்மார்ட் ஸ்பீக்கர், டிஸ்பிளே அல்லது ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், ஃபேமிலி பெல்ஸ் முக்கியமான நிகழ்வுகளுக்கு அனைவருக்கும் எச்சரிக்கை மணியை எழுப்பும்.

Published by:Archana R
First published:

Tags: Android, Android Apps, Mobile Phone Users