Home /News /technology /

ஆண்ட்ராய்டு 13 வந்தாச்சு... உங்கள் மொபைலுக்கு டவுன்லோடு செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு 13 வந்தாச்சு... உங்கள் மொபைலுக்கு டவுன்லோடு செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பிக்சல் போன்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பிக்சல் போன்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பிக்சல் போன் வைத்திருப்பவர்களுக்குக் கூகுள் நிறுவனம் முற்றிலும் புதிய ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  ஆண்ட்ராய்டு தற்போது தனது லேட்டஸ்ட் பதிப்பான ஆண்ட்ராய்டு 13-யை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆறுமாதங்களாகச் சோதனை முயற்சியில் பயன்படுத்தப்பட்டு வந்த இது, தற்போது அனைத்து பிக்சல் போன்களுக்கும் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  வால்பேப்பரை அடிப்படையாகக் கொண்ட தானியங்கி வண்ணத் திட்டங்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மெட்டீரியல் யூ உட்படப் பல புதிய அம்சங்களுடன் Google நிறுவனம் ஆண்ட்ராய்டு 13-யை வெளியிட்டுள்ளது. பிக்சல் போன் மற்றும் டேப்லெட் யூஸர்கள் தங்களது சாதனங்களைத் தனிப்பட்ட முறையில் செட்டிங் செய்து கொள்ளும் படியான புதிய திறன்களை Android 13 வழங்குகிறது. மெட்டீரியல் யூ தீமிங் , ஆப்களுக்காக்ன மொழி அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட பிரைவசி கன்ட்ரோல் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

  மெட்டீரியல் யூ தீமிங் ஆப்ஷன் மூலமாக வால்பேப்பரில் உள்ள வர்ணங்களில் எதை நீக்க வேண்டும் என முடிவெடுக்க முடியும். இதில் உள்ள per-app languages மூலம் உங்களுக்குத் தேவையான மொழிகளை ஒவ்வொரு ஆப்-க்கும் மாற்றிக்கொள்ளலாம், இதற்கு போனின் பிரதான மொழிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
  இப்போதைக்கு, ஆண்ட்ராய்டு 13 ஆனது சமீபத்திய கூகுள் பிக்சல் மாடல்களான பிக்சல் 4, பிக்சல் 4 எக்ஸ்எல், பிக்சல் 4 ஏ, பிக்சல் 4 ஏ (5 ஜி), பிக்சல் 5, பிக்சல் 5 ஏ, பிக்சல் 6, பிக்சல் 6 ஏ மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஆகியவற்றுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  விரைவில் சாம்சங் கேலக்ஸி, எச்எம்டி (நோக்கியா போன்கள்), ஆசஸ், iQOO, மோட்டரோலா, ஒன்ப்ளஸ், ஓபோ, ரியல்மீ, ஷார்ப், சோனி, டெக்னோ, விவோ, சியோமி போன்ற பிற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களிலும் செயல்படும் வகையில் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  நீங்கள் Android 13ஐப் பயன்படுத்த விரும்பினால், உங்கள் ஸ்மார்ட் போன் சமீபத்திய சாப்ட்வேர் அப்டேட்டை ஏற்க தயாராக உள்ளதாக என்பதை பரிசோதித்து அறிய வேண்டும். புதிய மென்பொருளை நிறுவுவதற்கான வழிகளை கீழே கொடுத்துள்ளோம்.

  Also Read : நீங்க கோபப்பட்டா பேசமாட்டான்.. உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் ரோபோ..! - சென்னை மாணவனின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு

  ஆண்ட்ராய்டு 13ஐ டவுன்லோடு செய்வது எப்படி?

  மேலே குறிப்பிடப்பட்டுள்ள Google Pixel ஸ்மார்ட் போனில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துவாராக இருந்தால் மட்டுமே, இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் Android 13 ஐப் பெற முடியும்.

  1: உங்கள் Google Pixel மொபைலில் அமைப்புகள் ஆப்ஸைத் (settings apps ) திறக்கவும்

  2: சிஸ்டத்திற்குச் (system) சென்றதும், அங்குள்ள சிஸ்டம் அப்டேட் (system update) என்பதை கிளிக் செய்யவும்.

  3: அதில் உங்கள் பிக்சல் போன் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்த பிறகு, கீழ்புறமாக வலதுபுறத்தில் உள்ள பதிவிறக்கம் (Download ) மற்றும் நிறுவு (Install) பட்டனைக் கிளிக் செய்யவும்.

  4: இப்போது உங்கள் போனில் ஆண்ட்ராய்டு 13 சிஸ்டம் டவுன்லோடு ஆக தொடங்கும், சுமார் 2ஜிபி அளவுள்ளதால் அப்டேட் ஆக 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகலாம்.

  5: ஆண்ட்ராய்டு 13 டவுன்லோடு ஆனதும், செல்போனை ஒருமுறை ரீபூட் செய்யவும். இப்போது போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் அப்டேட் ஆகியிருப்பதைக் காணலாம்.

  உங்கள் மொபைலின் வால்பேப்பர் தீம் மற்றும் வண்ணங்களுடன் பொருந்தும்படி, முகப்புத் திரையை மிகவும் ஸ்டைலாக மாற்ற Google அல்லாத ஆப்களையும் இப்போது தனிப்பட்ட முறையில் டிசைன் செய்து கொள்ளலாம்.
  Published by:Janvi
  First published:

  Tags: Android, New updates

  அடுத்த செய்தி