கூகுள் நிறுவனத்தின் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த வெர்சனாக ஆண்டிராய்டு 13 அறிமுகம் ஆக இருக்கிறது. இது தற்போது டெவலப்மெண்ட் (மேம்பாடு) நிலையில் இருக்கிறது. இது போல டெவலப்பிங் நிலையில் உள்ள சாஃப்ட்வேரை சாதாரண பயனாளர்கள் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்காது. ஆனால், ஆண்டிராய்டு டெவலப்பர்கள் அல்லது டெஸ்டர்கள் போன்றவர்கள் சோதனை முறையில் அதை பயன்படுத்திப் பார்க்க முடியும்.
இதுபோல டெஸ்டர்களுக்கு வழங்கப்படும் சாஃப்ட்வேரில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது கூகுள் நிறுவனம். தற்போது இதுபோல அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய வசதி என்ன என்றால், ஒரே ஃபோனில் சிம் கார்டுகளை மாற்றிக் கொள்ளாமலே பல மொபைல் நம்பர்களை பயன்படுத்தும் வசதி ஆகும். தற்போதைய சூழலில் எல்லா ஃபோனிலும் இ-சிம் வசதி கிடையாது. ஒருவேளை அந்த வசதி பயன்பாட்டுக்கு வந்தால், யூசர்கள் ஒரே சமயத்தில் மூன்று நெட்வொர்க்குகளின் மொபைல் நம்பர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால், பிரதான ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களின் ஃபோன்களில் இதுபோல 3 சிம் நம்பர்கள் சப்போர்ட் ஆகாது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆக, இப்போது அறிமுகமாக இருக்கும் மல்டிப்பில் சிம் வசதி மூலம் கிடைக்க இருக்கும் பலன் என்னவெனில், பிசிக்கல் சிம் சிலாட்டுக்கு பதிலாக இ-சிம் பயன்படுத்தலாம். இ-சிம் பயன்படுத்தி, பயனாளர்கள் 2 நெட்வொர்க் நம்பர்களை பயன்படுத்தலாம். இதனால், ஃபோனில் உள்ள ஸ்பேஸ்-இல் (இடம்) இதர ஹார்டுவேர் காம்போனெண்ட்டுகளை நிறுவிக் கொள்ளலாம்.
டூயல் சிம் சப்போர்ட்
பெரும்பாலான மொபைல் யூசர்களுக்கு டூயல் சிம் சப்போர்ட் என்பதே உதவிகரமாக இருக்கும். ஆனால், இந்த வசதியை சௌகரியமானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மொபைல் ஃபோன் தயாரிப்பாளர்கள் கொண்டு வரவில்லை. தற்போதைய சூழலில், ஒரு பிசிக்கல் சிம் ஸ்லாட் மற்றும் ஒரு இ-சிம் ஸ்லாட் ஆகியவை ஆப்பிள் ஐஃபோன் மற்றும் கூகுள் பிக்ஸெல் போன்ற ஃபோன்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அது சௌகரியமானதாக இல்லை.
Also Read : 10 லட்சத்துக்கும் மேற்பட்ட WhatsApp கணக்குகள் முடக்கம்..!
கடந்த சில ஆண்டுகளாக பிசிக்கல் சிம் கார்டுகளின் சைஸ் மிக சிறியதாக மாறி வருகின்றன என்ற போதிலும், முழுமையாக இ-சிம்களாக மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை மொபைல் ஃபோன் உற்பத்தியாளர்கள் இதுவரையிலும் கண்டறியவில்லை. ஒரே இ-சிம் போர்டில் இரண்டு நம்பர்களைப் பயன்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் கண்டறிந்தது என்றால், அது மாபெரும் புதிய அம்சமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Also Read : ஆண்டிராய்டு யூஸர்களின் விவரங்களை திருடிய கூகுள்..
ஆண்டிராய்டு 13 வெர்சனில் வர உள்ள மல்டிபிள் எனேபில்டு புரொபைல் என்பது டெஸ்டிங்கில் கிடைக்கும் முடிவைப் பொறுத்து நிலையான வெர்சனாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஆனால், இதுபோன்ற அம்சம் பயன்பாட்டுக்கு வந்தால் அது தயாரிப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என இரு தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.