Home /News /technology /

ஒவ்வொரு செயலியும் ஒவ்வொரு மொழியில் - ஆண்ட்ராய்டு 13 OS இன் அசத்தலான அப்டேடட்.!

ஒவ்வொரு செயலியும் ஒவ்வொரு மொழியில் - ஆண்ட்ராய்டு 13 OS இன் அசத்தலான அப்டேடட்.!

ஆண்ட்ராய்டு 13 OS

ஆண்ட்ராய்டு 13 OS

Android 13 | ஒவ்வொரு புதிய வெர்ஷனும் குறைந்த பட்சம் ஒரு சில புதிய அம்சங்களையாவது கொண்டு வரும். அந்த வகையில் இந்த OS வெவ்வேறு செயலிகளை வெவ்வேறு மொழிகளில் கஸ்டமைஸ் செய்ய உதவும் விருப்பத்தோடு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கோடிக்கணக்கான மொபைல் யூசர்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு OS அவ்வப்போது அப்டேட் செய்யப்படும். எப்பொழுது ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் அப்டேட் செய்யப்பட்டாலும் அது முதலில் பீட்டா யூசர்களிடம் பரிசோதனைக்கு அனுப்பும். அந்த வகையில் தற்போது சமீபத்திய ஆண்ட்ராய்டு புதுப்பிப்பான ஆண்ட்ராய்டு 13 பீட்டா யூசர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 13 வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு புதிய வெர்ஷனும் குறைந்த பட்சம் ஒரு சில புதிய அம்சங்களையாவது கொண்டு வரும். அந்த வகையில் இந்த OS வெவ்வேறு செயலிகளை வெவ்வேறு மொழிகளில் கஸ்டமைஸ் செய்ய உதவும் விருப்பத்தோடு வருகிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பான மொபைல் போன்களுக்கான ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம், பதின்மூன்றாவது வெர்ஷனை வெளியிட தயாராகி இருக்கிறது. ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 பற்றிய முழு விவரங்களை பகிர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பீட்டா வெர்ஷனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களிலும் இந்த வெர்ஷன் தற்போது கிடைக்கிறது. முந்தைய வெர்ஷனுடன் ஒப்பிடும் பொழுது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் பயன்படுத்தும் அனைவருக்கும் தன்னுடைய மொபைலில் செயலிகளை பலவிதமாக கஸ்டமைஸ் செய்யும் ஆப்ஷன்கள் தான் இதனுடைய சிறப்பம்சம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் கூகுள் பிக்சல் போன்களில் ஏற்கனவே ஆண்ட்ராய்டு 13 OS புதுப்பிக்கப்பட்டுள்ளது.



தற்பொழுது பெரும்பாலான இணைய சேவைகள் மற்றும் தயாரிப்புகள், செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் என்று அனைத்துமே பிராந்திய மொழிகளில் கிடைக்குமாறு மாற்றப்பட்டு வருவதால், பலவித ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்கள் மொபைலின் யூஐ, ஓஎஸ் மற்றும் வழிமுறைகள், விதிமுறைகள் என்று எல்லாவற்றையுமே உள்ளூர் மொழிகளில் வழங்கி வருகின்றன அல்லது வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

Also Read : ஆண்ட்ராய்டு 13 வந்தாச்சு... உங்கள் மொபைலுக்கு டவுன்லோடு செய்வது எப்படி?

பொதுவாக மொபைல் செட்டிங்ஸில் எந்த மொழியை பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு விருப்பம் இருக்கிறது. அதை தேர்வு செய்தால் மொபைல் இன்டர்பேஸ் முழுவதும் நீங்கள் தேர்வு செய்த மொழியில் மட்டும் தான் காணப்படும். இவ்வாறு ஒட்டுமொத்தமாக ஒரே மொழியிலேயே பயன்படுத்துவது உங்களுக்கு போர் அடித்து விட்டது என்றால் ஒவ்வொரு செயலியையும் நீங்கள் ஒவ்வொரு மொழியில் பயன்படுத்தலாம். இந்த விருப்பம் தற்போது சாம்சங் மற்றும் கூகுள் பிக்ஸல் போன் ஆகியவற்றில் கிடைக்கிறது இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் இங்கே.



சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்ஃபோன்களில் வெவ்வேறு செயலிகளுக்கு வெவ்வேறு மொழிகளை அமைப்பது எப்படி

  • உங்கள் ஃபோனின் settings பகுதிக்குச் செல்லுங்கள்

  • பொது நிர்வாகம் (General Management)என்ற ஆப்ஷன் வரும் வரை ஸ்க்ரோல் செய்யவும்

  • செயலியின் மொழிகள் (App Languages)என்பதைத் தேர்வு செய்யுங்கள்

  • மொபைல் திரையில் காணப்படும் பட்டியலில் இருந்து நீங்கள் மொழி மாற்ற விரும்பும் செயலியை தேர்வு செய்யுங்கள்

  • நீங்கள் எந்த மொழியை பயன்படுத்த வேண்டும் என்பதையும், அந்த பிராந்தியத்தையும் தேர்வு செய்யுங்கள் (கூகுள் பிக்சலில் பிராந்தியத் தேர்வு காணப்படாது)

  • தேர்வு செய்த மொழியில் குறிப்பிட்ட செயலி காண்பிக்கப்படும்


Also Read : பாதுகாப்பை பலப்படுத்திய வாட்ஸ்அப்... இனி இதை செய்ய முடியாது.!

ஆண்ட்ராய்டு 13இல் மட்டும் இந்த தனிப்பயன் தேர்வு வழங்கப்பட்டாலும், கூகுள் முந்தைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு இதை பயன்படுத்த ஏதேனும் வழிமுறையை யோசித்து அப்டேட் செய்யலாம். பல மொழிகள் தெரிந்தவர்களுக்கு, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Android, New updates, Smartphone, Technology

அடுத்த செய்தி