மொபைல்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டு வந்த ஆண்ட்ராய்டு 13 தற்போது டிவிகளில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் கூகுள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட் டிவிகளில் ஆண்ட்ராய்ட் 13 வெர்ஷனுக்கான புதிய அப்டேட்டை வெளியிட போவதாக அறிவித்துள்ளது. ஒருவேளை உங்கள் வீட்டில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி இருந்தால் நீங்களும் ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இந்த புதிய அப்டேட்டில் செயல் திறன் முன்னேற்றம், கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி மற்றும் பல யூசர் இன்டர்ஃபேஸ் வசதிகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு 12 ஆனது தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தால் இன்னும் சில வாரங்களிலேயே உங்கள் டிவிக்கும் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கிடைக்கப்பெறும்.
புதிய வசதிகள்:
ஆண்ட்ராய்டு 13-இல் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய சாப்ட்வேர் அப்டேட்டுகளின் மூலம் நீங்கள் ஒரு ஆடியோ பைலை பிளே செய்யும் போது அந்த சாப்ட்வேர் ஆனது ஆண்ட்ராய்டு டிவியுடன் இணைக்கப்பட்டுள்ள டிவைஸின் ஃபார்மேட்டை கண்டறிந்து அதற்கு ஏற்ற ஃபார்மெட்டில் அந்த ஆடியோ பைலை ப்ளே செய்யும். இதைத் தவிர கேமர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கேமிங் வசதியிலும் பல முன்னேற்றங்களை செய்துள்ளது கூகுள் நிறுவனம். வீடியோ கேம்களை ஸ்ட்ரீமிங் செய்பவர்களுக்கு வசதியாக ஸ்ட்ரீமிங் வசதியில் சில முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளது இவை தவிர தத்ரூபமான அனுபவத்தை கொடுப்பதற்காக ஸ்பீக்கர்களிலும் சவுண்டுபார்களிலும் சில முன்னேற்றங்களை செய்துள்ளது.
சந்தா கட்டாமல் OTT-யில் திரைப்படங்களை பார்க்கலாம்..! - எப்படி தெரியுமா?
உங்கள் டிவியில் உள்ள ஹார்டுவேரின் தரம் மற்றும் தகுதிக்கேற்ப மேலே கூறப்பட்டுள்ள அம்சங்களை நீங்கள் முழுவதுமாக அனுபவிக்க முடியும். மேலும் அதன் ஹார்ட்வேர் கொள்ளளவை பொறுத்து உங்களால் டிவியில் ரெப்ரெஷ்ரேட் மட்டும் ரிசல்யூஷன் ஆகியவற்றையும் மாற்றிக் கொள்ள முடியும். இவை அனைத்தையும் விட மேலாக புதிதாக வந்துள்ள ஆண்ட்ராய்டு 13ல் நவீன முறையில் அப்டேட் செய்யப்பட்ட பவர் மேனேஜ்மெண்ட் சிஸ்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டிவி இயக்குவதற்கு முடிந்த அளவு குறைந்த அளவு மின்சாரத்தையே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர கூகுள் ஹார்டுவேர் மியூட் ஸ்விட்ச் ஸ்டேட்டஸ் ஆன் பிரைவசி செட்டிங்ஸ் என்ற புதிய வசதியும், மைக்ரோ போனை பயன்படுத்துவதில் சில முன்னேற்றங்களையும் கொண்டு வந்துள்ளது. மேலும் அவனுக்கு புதிய கீபோர்டு லே அவுட் ஏபிஐ வசதியின் மூலம் எக்ஸ்டர்னல் கீபோர்டு பயன்படுத்தியும் பல வித்தியாசமான மொழிகளை தட்டச்சு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
UPI இல் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா.. கவலை வேண்டாம்.. இதை செய்தால் போதும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.