"திரும்பி வந்துட்டேனு சொல்லு" ஜாவா பைக்குகளின் மாஸ் ரீஎன்ட்ரியை புகழ்ந்த ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

தென்னிந்திய திரைப்படங்களில் மீண்டும் ஜாவா பைக்குகளின் ரீ என்ட்ரி, ஒரு ஸ்டாரின் ரீ என்ட்ரிபோல் இருப்பதாக மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

  • Share this:
கிளாசிக் லுக்குக்கு ஏற்ற பைக்குகளாக இருக்கும் ஜாவா பைக்குகளுக்கு தென்னிந்திய நடிகர்கள் மட்டுமல்லாது, இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவும் BigFan- ஆக மாறியிருக்கிறார்.

செக் பைக் நிறுவனமான ஜாவா பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய சினிமாவில் மீண்டும் தலைகாட்ட தொடங்கியிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ள, கிளாஸிக் நிறுவனத்தின் தலைவர் தரேஜா (Thareja), அது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சூரரைப்போற்று, எடக்காட் பட்டாலியன் 06 (Edakkad Battalion 06) ஆகிய படங்களில் ஜாவா (Jawa) பைக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும், விரைவில் திரைக்கு வரும் கூரூப் (Kurup) படத்திலும் ஜாவா காட்சியளிக்கும் எனக் கூறியுள்ளார். மேலும், தென்னிந்தியாவில் இருக்கும் தங்களின் நண்பர்கள் ஜாவா பைக்குகளை மெல்ல மெல்ல வெள்ளித்திரையிலும் காண்பித்து வருவதாக பெருமையுடன் கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ஜாவா பைக்குகள் ஸ்டார் என்பதால் ரீ என்ட்ரி ஆவதில் அர்த்தமுள்ளது எனக் கூறியுள்ளார். கிளாஸிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய தரேஜா மற்றும் மஹிந்திரா குழுமத்தின் ஒத்துழைப்பால் 2018 ஆம் ஆண்டு, ஜாவா பைக்குகள் இந்தியாவில் மீண்டும் ரீ என்ட்ரியாகின.

ருஸ்டோம்ஜி குழுமம், 1970 -களில் இந்தியாவில் முதன்முதலாக ஜாவா பைக்குகளை அறிமுகப்படுத்தியது. மக்களின் ஆதரவைப்பெற்ற இந்த பைக்குகள், அந்த காலகட்டத்தில் இந்தியாவின் அனைத்து நகர்புறங்களையும் ஆக்கிரமித்திருந்தது. இந்நிலையில், ஜாவா பைக்குகள் தொடர்பான ஒரு பங்கை ருஸ்டோம்ஜி குழுமத்தின் (Rustomjee Group) போமன் இரானியிடமிருந்து (Boman Irani) தரேஜா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் வாங்கியதால், ஜாவா பைக்குகள் மீண்டும் இந்திய சந்தையில் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு காரணமாக இருந்தனர்.

 

  

1970 மற்றும் 80-களில் ஜாவா பைக்குகள், பாலிவுட் திரையுலகை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தது. 1977-ம் ஆண்டு வெளியான பர்வாரிஷ் திரைப்படத்தில் ஜாவா யெஸ்டி பைக்குகளில் அமிதாப் பச்சன் சவாரி செய்திருப்பார். நடிகர் ஃபாரூக் ஷேக் 1981 ஆம் ஆண்டில் நடிகை தீப்தி நாவலை ஜாவா யெஸ்டியை அழைத்துச் சென்று ரொமான்ஸ் செய்வது போல் படக்காட்சிகள் அமைந்திருக்கும்.

அந்தளவுக்கு திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்திய ஜாவா பைக்குகள், இடையில் காணாமல் போயின. தற்போது, மீண்டும் சினிமாக்களில் ஜாவா ரீ என்ட்ரியாகிருப்பது, பைக் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஜாவா பைக்குகள் இந்தியாவில் இருப்பதற்கு மஹிந்திரா குழுமம் காரணம் என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். இதேபோல், ஆர்.எக்ஸ்.100, கான்டெஸா உள்ளிட்ட வாகனங்களையும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மஹிந்திராவால் முடியும் எனக் கூறியுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: