Home /News /technology /

இணைய தொடர்பு எடுக்க இவ்வளவு பணமா? சொந்தகமாவே பிராட்பேண்ட் உருவாக்கிய பொறியாளர் - அரசு ரூ.20 கோடி உதவித்தொகை.

இணைய தொடர்பு எடுக்க இவ்வளவு பணமா? சொந்தகமாவே பிராட்பேண்ட் உருவாக்கிய பொறியாளர் - அரசு ரூ.20 கோடி உதவித்தொகை.

சொந்தகமாவே பிராட்பேண்ட் உருவாக்கிய அமெரிக்காவை சேர்ந்த பொறியாளர்.

சொந்தகமாவே பிராட்பேண்ட் உருவாக்கிய அமெரிக்காவை சேர்ந்த பொறியாளர்.

Engineer Develops own Broadband for Village: ஜேர்டு மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டி அமெரிக்க அரசு, அவருக்கு ரூ.20 கோடி உதவித்தொகை வழங்கி பிராட்பேண்ட் நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaAmericaAmerica
    தனது பகுதியில் ஃபைபர் நெட் கனெக்‌ஷன் பெற இணைய நிறுவனங்கள் அதிகமான கட்டணம் கேட்ட நிலையில் தானே ஒரு இன்டர்நெட் கனெக்‌ஷன் சேவையை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நெட்வொர்க் பொறியாளர்.

    தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப சாதனங்களில் மிக முக்கியத் தேவையாக இருப்பது இன்டர்நெட் கனெக்‌ஷன். சில சமயம், சிக்னல் பலமின்றி இன்டர்நெட் வேகம் குறையும்போதும் நமக்கு வெறுப்பு அதிகரிக்கிறது. ஆனால், எல்லோருக்கும் கவலை அளிக்கக் கூடிய மற்றொரு விஷயம் என்னவென்றால் இன்டர்நெட் பயன்பாட்டிற்கான டெபாசிட் கட்டணம் தான். அதிவேக இன்டர்நெட் கனெக்‌ஷன் வேண்டுமென்றால் அதிக டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்பது நமக்குப் பெரிய விஷயமாக இருக்கிறது.

    பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே இன்டர்நெட் கனெக்‌ஷன் நிலையில் தானாகவே ஒரு இன்டர்நெட் கனெக்‌ஷன் தொடங்கியுள்ளார் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் வாஷ்டேநவ் கவுண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜேர்டு மௌச். இவர் பயன்படுத்தி வந்த 1.5 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட இன்டர்நெட் கனெக்‌ஷன் மிக மெதுவாக இயங்கியுள்ளது. இதனால், கடுப்பாகிப் போன அவர், தொடர்புடைய சேவை நிறுவனத்திடம், தனக்கு ஃபைபர் நெட் கனெக்‌ஷன் வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

    ஆனால், அவர் தங்கியுள்ள கிராமத்திற்கு இதுவரையிலும் ஃபைபர் கேபிள் அமைக்கப்படவில்லை என்ற நிலையில், புதிதாக கேபிள் அமைத்து கனெக்‌ஷன் தருவதற்கு 50 ஆயிரம் டாலர்கள் (ரூ.40 லட்சம்) கேட்டார்களாம்.

    Also Read :ரிசர்வ் வங்கி வெளியிட்ட டிஜிட்டல் கடன் சேவைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜேர்டு மௌச், தனக்கான பிராட்பேண்ட் கனெக்‌ஷனை தானே அமைத்துக் கொள்ள முடிவு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னிடம் அவர்கள் ஒரு 10 ஆயிரம் டாலர்கள் கேட்டிருந்தால் கூட, நான் செக் மூலமாக பணம் கொடுத்திருப்பேன். ஆனால், 50 ஆயிரம் டாலர்கள் என்பது மிகப் பெரிய தொகை. அந்த அளவுக்கு அது மதிப்புமிக்கதாக என பரிசீலனை செய்தேன்.

    எனக்குத் திரும்பக் கிடைக்காத டெபாசிட் தொகையை செலுத்தி, அவர்களுடைய நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்து கொள்ள நான் ஏன் உதவ வேண்டும் என்று யோசித்தேன்’’ என்றார் அவர்.

    ஜேர்டு ஒரு நெட்வொர்க் பொறியாளர் என்ற நிலையில், தங்கள் ஊருக்கான பிராட்பேண்ட் கனெக்‌ஷனை அவரே அமைத்துக் கொண்டார். தொடக்கத்தில் 70 வாடிக்கையாளர்கள் அதில் இணைந்த நிலையில், அதில் தற்போது 600 வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.

    ஜேர்டு மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டி அமெரிக்க அரசு, அவருக்கு ரூ.20 கோடி உதவித்தொகை வழங்கி பிராட்பேண்ட் நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு 100 எம்பிபிஎஸ் முதல் 1 ஜிபிபிஎஸ் வேகத்திலான இன்டர்நெட் வேகத்துடன் கனெக்‌ஷன்களை ஜேர்டு வழங்கி வருகிறார். மாதம் 55 டாலர்கள் முதல் 79 டாலர்கள் வரையில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Hi-speed internet, Internet

    அடுத்த செய்தி