Home /News /technology /

ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை

ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை

மாதிரி படம்

மாதிரி படம்

ஆப்பிளின் iOS போலல்லாமல் ஆண்ட்ராய்டு போன் உற்பத்தியாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலான சிஸ்டம் அப்டேட்களை மட்டுமே பெறுகிறார்கள். உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டை பெற்றுள்ளதா..?

சாஃப்ட்வேர் சப்போர்ட் என்பது ஸ்மார்ட் போன்களுக்கு தேவையான மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும், இருப்பினும் இது பெரும்பாலும் பிராண்டுகள் மற்றும் வாடிக்கையாளர்களால் கவனிக்கப்படுவதில்லை. ஆப்பிளின் iOS போலல்லாமல் ஆண்ட்ராய்டு போன் உற்பத்தியாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலான சிஸ்டம் அப்டேட்களை மட்டுமே பெறுகிறார்கள். உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டை பெற்றுள்ளதா..? ஆண்ட்ராய்டு 13 உங்களுக்கு கிடைக்குமா? உங்கள் ஸ்மார்ட் போனில் எத்தனை ஆண்டுகள் அப்டேட்கள் கிடைக்கும்..? இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் இருக்கும் பல முக்கிய பிராண்டுகள் மற்றும் அவற்றின் ஆண்ட்ராய்டு அப்டேட் குறித்து நிறுவனங்கள் வழங்கி இருக்கும் உறுதிமொழிகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

ஒன்பிளஸ்..

ஒன்பிளஸ் அதன் பிரீமியம் ஃபிளாக்ஷிப் மொபைல்களுக்கு 3 ஆண்ட்ராய்டு அப்டேட்களை வழங்குவதில் தெளிவாக உள்ளது. OnePlus 9 மற்றும் 9 Pro போன்ற ஃபிளாக்ஷிப் ஃபோன்கள் 3 வருட அப்டேட்களை பெறும். எனினும் OnePlus 9R மற்றும் Nord சீரிஸ் போன்ற சில லோ-டயர் டிவைஸ்கள்மற்றும் OnePlus 7 சீரிஸ் போன்ற பழைய ஃபிளாக்ஷிப் மொபைல்களுக்கு நிறுவனம் இந்த விஷயத்தில் ஓரளவு முரணாக உள்ளது. ColorOS- அடிப்படையிலான கோட்பேஸுக்கு மாற்றப்பட்டது இதற்கு காரணமாக இருக்கலாம். இதற்கிடையே ஒன்பிளஸ் டிவைஸ்களுக்கு அடிக்கடி பீட்டா அப்டேட்ஸ்கள் கிடைக்கின்றன. நம்பர் சீரிஸ் மற்றும் நோர்ட் சீரிஸ் ஆகிய இரண்டிலும், இது ஸ்டேபிள் அப்டேட்ஸ்களுக்கு முன் புதிய அம்சங்களை முயற்சி செய்ய யூஸர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

சாம்சங்..

சாம்சங் தற்போது பெரும்பாலான டிவைஸ்களுக்கு 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ்களையும், 4 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ்களையும் வழங்குகிறது. இதில் ஃபிளாக்ஷிப் Galaxy S சீரிஸ், Galaxy Z சீரிஸ், Galaxy A சீரிஸ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட M-சீரிஸ் போன்கள் அடங்கும். சாம்சங்கின் சில லோயர் என்ட M-சீரிஸ் டிவைஸ்கள் 2 வருட சிஸ்டம் அப்டேட்ஸ்களை மட்டுமே பெறுகின்றன. ஆனால் அவை 4 வருட செக்யூரிட்டி பேட்சஸை பெறும். புதிய போன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் பழைய டிவைஸ்களுக்கான சிஸ்டம் அப்டேட்கள் விரைவாக இருக்காது. எனினும் ஃபிளாக்ஷிப்ஸ் மற்றும் மிட்-ரேஞ்ச் டிவைஸ்கள் என இரண்டிலும், அதன் பழைய போன்களுக்கான அப்டேட்ஸ்களை ஓரளவு விரைவாக வெளியிடும் பிராண்டுகளில் இன்னும் சாம்சங் ஒன்றாக இருந்து வருகிறது.

சியோமி..

சியோமியின் டிவைஸ்களுக்கான அப்டேட் சைக்கிளை புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமம். ஏனென்றால் பிராண்டின் MIUI அப்டேட் சைக்கிள் காரணமாக, இது Android அப்டேட் சைக்கிளுடன் ஒத்திசையாமல் போய்விடுகிறது. இதற்கு உதாரணமாக, ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 இல் இயங்கும் ஒரு Xiaomi ஃபோனையும், மற்றொன்றுஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 13 இல் இயங்குவதையும் நாம் பார்க்கலாம். Xiaomi 12-சீரிஸ் போன்ற ஃபிளாக்ஷிப் மொபைல்கள் 3 வருட சிஸ்டம் அப்டேட்ஸ் (MIUI அப்டேட்ஸ் வழியாக) மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேச்சஸ்களை பெறுகின்றன. Xiaomi 11 Lite NE 5G மற்றும் Redmi Note 11 Pro+ போன்ற அப்பர்- மிட்ரேஞ்ச் மற்றும் மிட்ரேஞ்ச் டிவைஸ்கள் 2 வருட சிஸ்டம் அப்டேட்ஸ் மற்றும் 3 வருட செக்யூரிட்டி பேச்சஸ்களை பெறும் என நிறுவனம் கூறுகிறது.

ஒப்போ மற்றும் ரியல்மி..

GT 2 Pro போன்ற ஃபிளாக்ஷிப் போன்களுக்கு ரியல்மி 3 வருடம் சிஸ்டம் அப்டேட்ஸ் மற்றும் 4 வருடம் செக்யூரிட்டி பேச்சஸ்களை வழங்கும். GT 2-சீரிஸில் உள்ள ஒவ்வொரு டிவைஸிற்கும் இது பொருந்தும். Realme GT Neo சீரிஸில் 2 வருட சிஸ்டம் அப்டேட்ஸ் மற்றும் 3 செக்யூரிட்டி பேச்சஸ் அப்டேட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Realme C-series மற்றும் Narzo சீரிஸ் போன்ற லோயர்-என்ட் போன்களில் எப்படி வழங்கப்படும் என்பதில் தெளிவு இல்லை. ஒப்போ ஃபோன்களில், ஃபிளாக்ஷிப் Find-சீரிஸ் 3 வருடம் சிஸ்டம் அப்டேட்ஸ்களையும், நான்கு வருடம் செக்யூரிட்டி பேச்சஸ்களையும் பெறுகிறது. Reno, F- சீரிஸ் மற்றும் K சீரிஸ் போன்கள் போன்ற பிற டிவைஸ்களுக்கு நிறுவனம் அப்டேட்ஸ் சைக்கிளை உறுதிப்படுத்தவில்லை.

Also see... இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம் எப்போது.?

விவோ மற்றும் iQOO:

விவோ தற்போது FuntouchOS அப்டேட்ஸ் வழியே அதன் ஃபிளாக்ஷிப் X-சீரிஸ் போன்களுக்கு 3 வருடம் சிஸ்டம் அப்டேஸ்களையும், 4 வருட செக்யூரிட்டி பேச்சஸ்களையும் வழங்குகிறது. எனினும் ஜூலை 2021 முன் வெளியான X-சீரிஸ் ஃபோன்கள் இந்த நன்மையைப் பெறாது. iQOO பிராண்ட் அதன் ஃபோன்களுக்கான FuntouchOS சிஸ்டம் அப்டேட்களை வழங்குகிறது. ஆனால் iQOO 9 Pro போன்ற ஃபிளாக்ஷிப்கள் 2 வருட சிஸ்டம் அப்டேட்ஸ் மற்றும் 3 வருட செக்யூரிட்டி பேச்சஸ்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

கூகுள்:

பிக்சல் டிவைஸ்களில் விரைவான ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ்கள் கிடைக்கும் என்று கூகுள் உறுதி கூறி உள்ளது. புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கான டெவலப்பர் பீட்டா முதலில் பிக்சல் ஃபோன்களை வந்தடைகிறது. எந்த ஃபோன் மற்றும் எந்த மாறுபாடு வாங்கினாலும் பிக்சல் ஃபோன்கள் மூன்று வருட அப்டேட் சைக்கிளை கொண்டுள்ளன. உதாரணமாக, நீங்கள் Android 12 உடன் பிக்சலை வாங்கினால், Android 15 அப்டேட்டை பெறுவீர்கள்.

Also see...உங்கள் ஃபோன் டேட்டாவை எவ்வாறு சேமிக்கலாம் தெரிந்துகொள்ளுங்கள்

மோட்டோரோலா, மைக்ரோமேக்ஸ் மற்றும் இன்ஃபினிக்ஸ் போன்ற பிராண்டுகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு சிஸ்டம் அப்டேட்ஸ்கள் மற்றும் செக்யூரிட்டி பேட்சஸ்களுக்கான உறுதியான கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Android, Android Apps

அடுத்த செய்தி