’ஹேக்’ செய்யப்பட்ட அமிதாப் பச்சன் ட்விட்டர் கணக்கு!

மும்பை போலீஸார் இந்த ஹேக்கிங் நடவடிக்கை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

’ஹேக்’ செய்யப்பட்ட அமிதாப் பச்சன் ட்விட்டர் கணக்கு!
ஹேக் செய்யப்பட்ட அமிதாப் பச்சன் ட்விட்டர் கணக்கு
  • News18
  • Last Updated: June 11, 2019, 11:59 AM IST
  • Share this:
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கு நேற்று ஹேக் செய்யப்பட்டது.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனின் ட்விட்டர் பக்கத்தின் ப்ரொஃபைல் படம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடன் ‘லவ் பாகிஸ்தான்’ என்ற டேக் இணைக்கப்பட்டு  நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

நடிகர் அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கு துருக்கியைச் சேர்ந்த ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன் கணக்கிலேயே, “ஒட்டுமொத்த உலகத்துக்குமான அழைப்பு இது. துருக்கி கால்பந்து வீரர்களுக்கு எதிரான ஐஸ்லாந்தின் நடவடிக்கை முற்றிலும் விரோதமானது. நாங்கள் மென்மையாகப் பேசுவோம். ஆனால், ஹேக்கிங் என்னும் பெரிய கோள் எங்களிடம் உள்ளது. அயிதிஷ் டிம் டர்கிஷ் சைபர் ஆர்மி” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.


மும்பை போலீஸார் இந்த ஹேக்கிங் நடவடிக்கை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே குழுவினர்தான் சில நாட்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர்களான சாகித் கபூர், அனுபம் கெளர் ஆகியோரின் ட்விட்டர் கணக்கையும் ஹேக் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: இந்தியாவுக்கு வருகிறது ‘பப்ஜி லைட்’!
First published: June 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்