ஜனவரி 20 முதல் தொடங்குகிறது அமேசான் Great Indian Sale!

அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஜனவரி 19-ம் தேதி மதியம் 12 மணிக்கே தள்ளுபடி விற்பனை தொடங்குகிறது.

ஜனவரி 20 முதல் தொடங்குகிறது அமேசான் Great Indian Sale!
அமேசான் விற்பனை
  • News18
  • Last Updated: January 13, 2019, 10:36 AM IST
  • Share this:
அமேசான் ஆன்லைன் விற்பனையின் Great Indian Sale வருகிற ஜனவரி மாதம் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது.

அமேசான் நிறுவனம் வழங்கும் Great Indian Sale வருகிற ஜனவரி 20-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நான்கு நாட்களுக்கான விற்பனைத் திரவிழாவில் ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப், கேமிரா எனப் பல எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் அதிகப்படியான தள்ளுபடிகள் இருக்கும் என அமேசான் தெரிவித்துள்ளது.

கூடுதலாக ஆன்லைனில் பணம் செலுத்தி ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் HDFC கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடியும் உள்ளது. அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஜனவரி 19-ம் தேதி மதியம் 12 மணிக்கே தள்ளுபடி விற்பனை தொடங்குகிறது. அமேசான் ப்ரைம் இல்லாத வாடிக்கையாளர்களை விட 12 மணி நேரம் முன்னதாகவே தள்ளுபடி தொடங்குகிறது.


பஜாஜ் நிதிச்சேவை நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்துபவர்களுக்கு அமேசான் no-cost EMI சலுகையை வழங்குகிறது. டிவி உள்ளிட்ட ஹோம் அப்லையன்ஸ்களுக்கு 50% வரையிலும் ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப் உள்ளிட்ட டெக் பொருட்களுக்கு 60% வரையிலும் தள்ளுபடி உள்ளது.

மேலும் பார்க்க: நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்
First published: January 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்