உணவு டெலிவரி சேவையிலும் கால் பதிக்கத் தயாராகும் அமேசான் இந்தியா!

உபேர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியிலும் அமேசான் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: July 30, 2019, 3:14 PM IST
உணவு டெலிவரி சேவையிலும் கால் பதிக்கத் தயாராகும் அமேசான் இந்தியா!
அமேசான்
Web Desk | news18
Updated: July 30, 2019, 3:14 PM IST
இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் சேவைத்துறையிலும் களம் இறங்க அமேசான் நிறுவனம் தயாராகி உள்ளது.

இந்தியாவில் உணவு டெலிவரி துறையைப் பொறுத்தவரையில் மிகவும் கடுமையான போட்டி நிலவுகிறது. அமெரிக்க நிறுவனமான அமேசான், இந்தியாவில் உள்ளூர் நிறுவனமான கேட்டமரன் உடன் இணைந்து இந்த உணவு டெலிவரி சேவையைத் தொடங்க உள்ளது.

இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் செப்டம்பர் மாதம் முதலே விழாக்காலம் தொடங்கிவிடும் என்பதால் அப்போதிருந்தே இந்த உணவு டெலிவரி சேவையையும் தொடங்கலாம் என்ற முடிவில் அமேசான் இருப்பதாகக் கூறப்படுகிறது.


இந்தியாவைப் பொறுத்த வரையில் நடுத்தர மக்களே உணவு டெலிவரி சேவையை அதிகம் பயன்படுத்துவதாக தனியார் ஆய்வு நிறுவனமான ரெட்சீர் தெரிவிக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் இத்துறை 128 சதவிகிதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

தற்போதைய சூழலில் ஸ்விகி, ஜொமேட்டோ, உபேர் ஆகிய நிறுவனங்கள் முன்னணி இடத்தில் உள்ளன. இதில் உபேர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியிலும் அமேசான் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: இந்தப் புதிய ஏசி-யை நீங்கள் அணிந்துகொள்ளலாம்... அறிமுகம் செய்த சோனி!
First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...