ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கும் அமேசான் ’சம்மர் சேல்’!

இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒன்ப்ளஸ் 6T, ரெட்மி 6A, ரியல்மி U1, ஆகிய ஃபோன்களுக்கு அதிரடியான தள்ளுபடிகள் இருக்கும்.

Web Desk | news18
Updated: April 29, 2019, 4:12 PM IST
ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கும் அமேசான் ’சம்மர் சேல்’!
அமேசான்
Web Desk | news18
Updated: April 29, 2019, 4:12 PM IST
மே மாதம் முதல் வாரத்தில் அமேசான் ‘சம்மர் சேல்’ ஆஃபர் திருவிழா தொடங்க உள்ளது.

மே மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையில் அமேசான் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் ‘சம்மர் சேல்’ தொடங்குகிறது. அமேசான் ப்ரைம் உறுப்பினர்களுக்கு மட்டும் ஆஃபர் காலை மே 3-ம் தேதி மதியம் 12 மணி அளவிலிருந்தே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்ஃபோன்களுக்கு மட்டுமல்லாமல் லேப்டாப், ஸ்பீக்கர்கள், டேப்லெட் ஆகிய எலெக்ட்ரானிக் பொருட்கள் மீதும் அமேசான் அதிக சலுகைகளைத் தர உள்ளதாகக் கூறப்படுகிறது. மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிகப்பட்சமாக 40% வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட உள்ளது.


இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒன்ப்ளஸ் 6T, ரெட்மி 6A, ரியல்மி U1, ஹானர் ப்ளே, விவோ நெக்ஸ் மற்றும் ஐ-போன் X ஆகிய ஃபோன்களுக்கு அதிரடியான தள்ளுபடிகள் இருக்கும் என்றும் அமேசான் அறிவித்துள்ளது.

மேலும் பார்க்க: மு.க.ஸ்டாலினைச் சந்தித்தது எனக்கு தேசிய கீதம் இசைத்தது போல் இருந்தது - கோமதி உருக்கம்
First published: April 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...