ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அதிரடி பணிநீக்கத்தை கையிலெடுத்த அமேசான் - டெக் ஊழியர்கள் கண்ணீர்

அதிரடி பணிநீக்கத்தை கையிலெடுத்த அமேசான் - டெக் ஊழியர்கள் கண்ணீர்

அமேசான்

அமேசான்

அமேசான் நிறுவனத்திற்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கவும் வருங்காலத்திற்கான திட்டமிடல்களை மேற்கொள்வதற்கும் இந்த பனி நீக்கத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  ட்விட்டர் மற்றும் மெட்டாவை தொடர்ந்து அமேசானும் தனது பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் வேலையை தொடங்கியுள்ளது.

  ஆன்லைன் வணிகத்தில் முன்னிலையில் இருக்கும் அமேசான் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையே இதற்கு காரணம் என்றும் அலுவலகத்தில் ஏற்படும் செலவுகளை குறைப்பதற்காக இந்த பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

  சமீபத்தில் லின்க்ட் இன் (Linkedin) வலைத்தளத்தில் அமேசானை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் தான் அமேசானில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதை பதிவிட்டுள்ளார்.

  “ஒன்றரை வருடங்களாக அமேசான் ரோபாட்டிக்ஸ் செயற்கை நுண்ணறிவு பிரிவில் வேலை செய்து வந்த என்னை, அதிர்ச்சியளிக்கும் விதமாக பணி நீக்கம் செய்துள்ளனர். நான் மட்டுமல்ல எங்களது மொத்த அணியையும் வேலையை விட்டு நீக்கி உள்ளனர். இந்த அற்புதமான பயணத்தில் உடன் இருந்த பொறியாளர்கள் மற்றும் அணி தலைவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ஏ டபுள்யூ எஸ் மூலம் ரோபோடிக்ஸ் சி ஐ/ சி டி பைப்ளைன் முன்னேற்றத்திற்காக வேலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

  என்னை முன்னர் இருந்ததை விட சிறந்த மென்பொருள் பொறியாளராக வடிவமைத்துக் கொள்ள உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எதிர்காலத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச வாய்ப்புகள் ஆகிய இரண்டிற்குமே மென்பொருள் பொறியாளராக வேலை பார்க்க தயாராக உள்ளேன். உதவிகள் வரவேற்கப்படுகின்றன” என்று சாங் என பெயர் கொண்ட அந்த மென்பொருள் பொறியாளர் பதிவிட்டுள்ளார்.

  கடந்த வாரம் தான் பணி நீக்கம் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை, தனது பணியாளர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் அமேசான் அனுப்பி இருந்தது. திடீரென்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணி நீக்கத்திற்கு முக்கிய காரணமாக உலகெங்கிலும் நிகழ்ந்து வரும் பொருளாதார மந்த நிலையும், பண வீக்கம் மற்றும் அசாதாரணமான அரசியல் சூழ்நிலை ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. இதனால் அமேசான் நிறுவனத்திற்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கவும் வருங்காலத்திற்கான திட்டமிடல்களை மேற்கொள்வதற்கும் இந்த பனி நீக்கத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.

  ட்விட்டருக்கு மாற்றாக இணையத்தில் கிடைக்கும் டாப் 5 ஆப்ஸ்கள்!

  ட்விட்டர் மெட்டா அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களின் மதிப்புகளும் சந்தையில் குறைந்த வண்ணம் உள்ளன. எனவே இவை அனைத்தையும் சரி கட்டுவதற்காக அமேசான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. கடந்த புதன்கிழமை அமேசானின் பங்குகள் கிட்டத்தட்ட 4.3 சதவீதம் அளவு குறைந்துள்ளது.

  ட்விட்டரில் அடுத்த அதிரடி மாற்றம் அறிமுகம்!

   மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து கணக்கிடுகையில் 889 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. இதனால் உலகளவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள இந்த பணிநீக்கத்தை ஒன்றன்பின் ஒன்றாக செய்து வருகின்றன. ஏற்கனவே ட்விட்டரில் இருந்து 50% பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மெட்டாவும் தனது பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Amazon, Twitter