Home /News /technology /

அமேசானில் Smartphone Upgrade Days விற்பனை - மொபைல்களுக்கு சிறப்பு சலுகை!

அமேசானில் Smartphone Upgrade Days விற்பனை - மொபைல்களுக்கு சிறப்பு சலுகை!

அமேசானில் Smartphone Upgrade Days விற்பனை

அமேசானில் Smartphone Upgrade Days விற்பனை

OnePlus Nord CE 2 மற்றும் OnePlus Nord 2 ஆகிய மொபைல்கள் முறையே ரூ.21,999 மற்றும் ரூ.28,499-க்கு கிடைக்கும், இதில் 3 மாத நோ காஸ்ட் EMI சலுகை மற்றும் ரூ.2,000 வரை கேஷ்பேக் அடங்கும்.

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் ஸ்மார்ட்போன் அப்கிரேட் டேஸ் (Smartphone Upgrade Days) விற்பனையை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு விற்பனையின் போது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்கள் மற்றும் அக்சஸரிஸ்களுக்கு பல தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கப்பட உள்ளது. OnePlus, Xiaomi, Samsung, iQoo, Realme, Tecno மற்றும் Oppo உள்ளிட்ட பிராண்டுகளின் தயாரிப்புகளில் வாடிக்கையாளர்கள் 40 சதவீதம் வரை தள்ளுபடியை பெற முடியும். ஏப்ரல் 1 முதல் நடைபெற்று வரும் இந்த விற்பனை வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை லைவில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சேலின் போது சிட்டி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்டை பெற முடியும். தவிர வாடிக்கையாளர்கள் 12 மாதங்கள் வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் நோ-காஸ்ட் EMI பேமெண்ட் முறையை பெறலாம்.

அமேசானில் சில லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் டீல்கள்..

லாவா:

நீங்கள் ஒரு இந்திய நிறுவனத்தின் டிவைஸை வாங்க விரும்பினால், Lava Agni 5G மற்றும் Lava X2 ஆகியவற்றை கருத்தில் கொள்ளலாம். Lava Agni 5G மொபைல் ரூ.15,740-க்கு கிடைக்கிறது. இதில் வங்கி கார்டுகளுக்கான ரூ.1,250 கேஷ்பேக் அடங்கும். Lava X2 5,849 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ்:

OnePlus Nord CE 2 மற்றும் OnePlus Nord 2 ஆகிய மொபைல்கள் முறையே ரூ.21,999 மற்றும் ரூ.28,499-க்கு கிடைக்கும், இதில் 3 மாத நோ காஸ்ட் EMI சலுகை மற்றும் ரூ.2,000 வரை கேஷ்பேக் அடங்கும். இந்த விற்பனையின் போது OnePlus 9RT மொபைலை வாடிக்கையாளர்கள் ரூ.38,999-க்கு வாங்கலாம். OnePlus 9Pro மொபைல் ரூ.49,199 மற்றும் OnePlus 9 ரூ.35,599-க்கு 6 மாத நோ காஸ்ட் EMI ஆப்ஷன் மற்றும் ரூ.5,000 வரை பேங்க் கேஷ்பேக்குடன் கிடைக்கிறது.

ரியல்மி:

realme Narzo 50 மற்றும் realme Narzo 50A ஆகிய மொபைல்கள் முறையே ரூ.11,749 மற்றும் ரூ.10,349-க்கு கிடைக்கும். இதில் ரூ.1,250 வரையிலான கேஷ்பேக் அடக்கம். இந்த ஸ்மார்ட் போன்கள் Helio G85 கேமிங் ப்ராசஸர், 6000 mAh மெகா பேட்டரி மற்றும் பல சிறந்த அம்சங்களுடன் வருகின்றன.

சியோமி:

Xiaomi ஸ்மார்ட் போன்கள் இந்த விற்பனையின் போது கூடுதல் வங்கிச் சலுகைகளுடன் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் வங்கிச் சலுகைகளுடன் Redmi 10 Prime மொபைல் ரூ.11,249, Redmi 9A Sport மொபைல் ரூ.6,299, Redmi Note 11 மொபைல் ரூ.12,499; Redmi Note 10 Pro மொபைல் ரூ.16,749, Redmi Note 10T மொபைல் ரூ.11,749; Xiaomi 11 Lite NE 5G மொபைல் ரூ. 24,999 மற்றும் Xiaomi 11T Pro மொபைல் ரூ.36,999 உள்ளிட்ட சலுகை விலையில் கிடைக்கிறது.

டெக்னோ மற்றும் ஒப்போ:

வங்கிச் சலுகைகளுடன் Tecno Spark 8T மொபைல் ரூ.8,819-க்கும், OPPO A15s மொபைல் ரூ.9,891-க்கும் கிடைக்கும்.

iQOO ஸ்மார்ட்போன்கள்:

iQOO 9 Pro 5G மொபைல் அனைத்து வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளிலும் ரூ.6,000 வரை தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்சிற்கு ரூ. 4,000 வரை தள்ளுபடி உட்பட, ரூ.54,990-க்கு கிடைக்கும். அதே போல iQOO 9 SE மொபைலானது, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச்சிற்கு ரூ.3,000 வரை தள்ளுபடி உட்பட ரூ.27,990 முதல் கிடைக்கும்.

Also read... ரயில் டிக்கெட் புக் செய்துவிட்டு பின்னர் கட்டணம் செலுத்தலாம் - பேடிஎம் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி!

சாம்சங்:

ரூ.1,250 வங்கி கேஷ்பேக்குடன் Samsung Galaxy M32 5G மொபைல் மற்றும் Samsung Galaxy M52 5G மொபைல் ஆகியவை முறையே ரூ.15,749 மற்றும் ரூ.23,749-க்கு கிடைக்கும். Samsung Galaxy M12 மொபைல் மற்றும் Samsung Galaxy M32 மொபைல் ஆகியவை முறையே ரூ.9,499 மற்றும் ரூ.12,999-க்கு விற்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Amazon

அடுத்த செய்தி