• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • சூப்பர் ஃபாஸ்ட் இணைய வசதிகளுக்காக 4,500 சாட்டிலைட்டுகளை விண்ணில் நிறுத்துகிறது அமேசான்!!

சூப்பர் ஃபாஸ்ட் இணைய வசதிகளுக்காக 4,500 சாட்டிலைட்டுகளை விண்ணில் நிறுத்துகிறது அமேசான்!!

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

தனியார் விண்வெளித் துறையில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனமும் போட்டியிட்டுக் கொள்கின்றன.

  • Share this:
    அதிவேக இணைய வசதிகளுக்காக 4,500 சாட்டிலைட்டுகளை அமேசான் நிறுவனம் வான்வெளியில் நிலை நிறுத்தவுள்ளது. இதற்காக அமெரிக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

    ஆன்லைன் வர்த்தகம், ஓடிடி, இசை, புத்தகம் என பல துறைகளில் கலக்கி வரும் அமேசான், விண்வெளித் துறையிலும் பல புரொஜெக்டுகளை ஆரம்பித்திருக்கிறது. முதற்கட்டமாக 3,236 செயற்கை கோள்களை விண்ணில் நிறுத்துவதற்காக ரூ. 74,200 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அமேசான் கூறியிருந்தது. இதன் தொடர்ச்சியாக மேலும், 4,500 செயற்கைகோள்கைளை நிலை நிறுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து அமேசான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'உலகில் இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ள பகுதியில், அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடுகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை தற்போது பிராட் பேண்ட் வசதிகளை நம்பியுள்ளன. இவை அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குதில் சிக்கல்கள் உள்ளது.

    உலகில் இன்னும் பல இடங்களில் இன்டர்நெட் வதிச சென்று சேரவேண்டும். உலகில் 51 சதவீத மக்களிடம் மட்டுமே இன்டர்நெட் உள்ளது. வளரும் நாடுகளில் 44 சதவீதம் பேர் மட்டுமே இணையத்தை பயன்படுத்துகின்றனர். அமேசான் மேற்கொள்ளும் நடவடிக்கையால் உலகில் இணையத்தின் சேவை விரிவடையும். அதிவேக இன்டர்நெட் சேவையை மக்கள் பெறுவார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

    தனியார் விண்வெளித் துறையில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனமும் போட்டியிட்டுக் கொள்கின்றன. அமெரிக்க அரசின் விதிகளை எலான் மஸ்க் பலமுறை மீறியதாக, ஜெஃப் பெசாஸ் குற்றம் சாட்டி வருகிறார். விண்வெளி தொடர்பாக அமெரிக்க அரசின் ஒப்பந்தங்களை பெறுவதில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும், ஜெஃப் பெசாஸின் ப்ளூ ஆர்ஜினுக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. பல்வேறு சேவைகளுக்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 1,700 செயற்கை கோள்களை விண்ணில் நிறுத்தியுள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: