ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஒருபக்கம் பணிநீக்கம், மறுபக்கம் அதிக அளவில் புதிய ஊழியர்களை சேர்க்க திட்டம்.! அமேசானில் என்ன நடக்கிறது.?

ஒருபக்கம் பணிநீக்கம், மறுபக்கம் அதிக அளவில் புதிய ஊழியர்களை சேர்க்க திட்டம்.! அமேசானில் என்ன நடக்கிறது.?

அமேசான்

அமேசான்

அமேசான் குறிப்பிட்ட செட்டில்மென்ட், தொகுப்பூதியம் பலன்களுடன் தானாக முன்வந்து ஊழியர்களை ராஜினாமா செய்ய ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் சில வாரங்களுக்கு முன்னர் சர்வதேச அளவில் ஏறக்குறைய 10,000 ஊழியர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. அமேசான் குறிப்பிட்ட செட்டில்மென்ட், தொகுப்பூதியம் பலன்களுடன் தானாக முன்வந்து ஊழியர்களை ராஜினாமா செய்ய ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நாட்களிலேயே அமேசான் நிறுவனம் தனது Web Services பிரிவிற்கு அதிக ஊழியர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமேசான் நிறுவனத்தின் Amazon Web Services-ன் சீனியர் விபி- சேல்ஸ் & மார்க்கெட்டிங் அதிகாரியான மேட் கார்மன் சமீபத்தில் பேசுகையில், எங்களது AWS வணிக பிரிவிற்கு விரைவில் அதிக நபர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டு வருகிறோம் என தகவல் தெரிவித்துள்ளார். இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் வரும் 2023-ஆம் ஆண்டில் அதிக ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. செலவுகளை சேமிக்க ஒருபக்கம் பணிநீக்கத்தை கையில் எடுத்துள்ள அமேசான், மறுபக்கம் பணியமர்த்தும் செயல்முறையை முழுமையாக நிறுத்தவில்லை என்பதை வெளியாகி உள்ள தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமேசான் நிறுவனம் தனது கிளவுட் யூனிட்டிற்கு அதிக நபர்களை வேலைக்கு பணியமர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் நிறுவனத்தின் கிளவுட் யூனிட் மிகவும் லாபகரமாக இயங்கி வருகிறது மற்றும் விரைவான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எனவே அமேசான் கிளவுட் யூனிட் வணிகத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதனிடையே எங்கள் வணிகம் இன்னும் வேகமாக வளர்ந்து வருவதால் அடுத்த ஆண்டு இன்னும் அதிக ஊழியர்களை சேர்ப்போம் என எதிர்பார்ப்பதாக மேட் கார்மன் கூறுகிறார். தேவை குறையும் போது எங்கள் டேட்டா சென்டர்களின் வளர்ச்சியை மிதமாக்குவோம். எங்களிடம் நிறைய சப்ளை செயின் மாடல்ஸ் உள்ளன, இதன் காரணமாகவே அதிக டேட்டா சென்டர்ஸ் உருவாக்க வேண்டிய சூழல் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கான நடவடிக்கையில் நாங்கள் இறங்க இருக்கிறோம் என்று கார்மன் கூறினார்.

Read More : உலகின் இரண்டாவது மிகப்பெரும் கேமிங் சந்தையாக உருவெடுக்கும் இந்தியா!

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி அமேசான் நிறுவனம் அடுத்த ஒரு வருடத்தில் புதிய டேட்டா சென்டர்களை உருவாக்கி அதன் கிளவுட் யூனிட்டை விரிவுபடுத்தும் முயற்சியை திட்டமிட்டு வருகிறது. நிறுவனத்தின் கிளவுட் யூனிட் ரென்ட் டேட்டா ஸ்டோரேஜ் மற்றும் கம்ப்யூட்டிங் பவர்-ஐ வழங்குகிறது. செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நிறுவனத்தின் மற்ற யூனிட்களில் பணியமர்த்தல் நடைமுறை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், அதிக லாபம் தரும் பிஸினஸாக கூறப்படும் கிளவுட் யூனிட்டில் தொடர்ந்து முதலீடு செய்ய நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அமேசானின் கிளவுட் யூனிட் இந்த 2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 27% வளர்ச்சியை பதிவு செய்து மொத்தம் $20.5 பில்லியன் விற்பனையாகியுள்ளது. எனினும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல நிறுவனங்கள் இப்போது செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் எதிர்பார்க்கும் வளர்ச்சி இன்னும் இல்லை என கூறப்படுகிறது.

First published:

Tags: Amazon, Technology