அமேசான் பிரைம் வீடியோவில் குரூப் ஸ்ட்ரீமிங்கிற்கான "வாட்ச் பார்ட்டி" அம்சம் : இந்தியாவில் அறிமுகம்!

குரூப் ஸ்ட்ரீமிங்

இந்த ஸ்ட்ரீமிங் அம்சம் பயனர்களை சின்க்ரோனைஸ்டு பின்னணி விருப்பத்துடன் வாட்ச் பார்ட்டியை  ஹோஸ்ட் செய்யவும் மற்றும் பங்கேற்கவும் உதவுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரைம் வீடியோ தளத்தில் குரூப் ஸ்ட்ரீமிங்கை(Group Streaming) அனுமதிக்கும் புதிய "வாட்ச் பார்ட்டி" (Watch Party Feature) அம்சத்தை அமேசான் நிறுவனம் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இந்த அம்சம் மூலம் விர்ச்சுவல் முறையில் நண்பர்களுடன் ஒன்றிணைந்து ஒரு படத்தை காணும் அனுபவத்தை பெறலாம். இந்த ஸ்ட்ரீமிங் அம்சம் பயனர்களை சின்க்ரோனைஸ்டு பின்னணி விருப்பத்துடன் வாட்ச் பார்ட்டியை  ஹோஸ்ட் செய்யவும் மற்றும் பங்கேற்கவும் உதவுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இது பிரைம் வெப் கிளையன்டுடன் (Prime web client) மட்டுமே இயங்குகிறது.

மேலும் ஒரு வாட்ச் பார்ட்டி அமர்வில் 100 பங்கேற்பாளர்கள் வரை பங்கேற்க முடியும். இந்த அம்சம் முதன்முதலில் அமெரிக்காவில் அமேசான் பிரைம் பயனர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் பயன்பாட்டிற்கு வந்தது. இதையடுத்து படிப்படியாக இங்கிலாந்து போன்ற பிற நாட்டு பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கத் தொடங்கியது. அமேசான் நிறுவனம் இந்த அம்சத்தின் வளர்ச்சி குறித்து தனது செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. மேலும் வாட்ச் பார்ட்டி அம்சம் தற்போது இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளது. 

இந்த அம்சம் குறித்து அந் நிறுவனம் கூறியுள்ளதாவது, ஸ்ட்ரீமிங் அமர்வின் போது ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஒரு பிரைம் மெம்பர்ஷிப் (Prime membership) அல்லது ஒரு பிரைம் வீடியோ சந்தா(Prime Video subscription) இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. கூடுதலாக, வாட்ச் பார்ட்டி அமர்வின் ஹோஸ்டுக்கு மட்டுமே வீடியோவை இயக்கவோ, இடைநிறுத்தம் செய்யவோ மற்றும் வீடியோவை தவிர்க்கவோ கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த விர்ச்சுவல் திரைப்பட அமர்வில் இருக்கும் பங்கேற்பாளர்கள் ஏதேனும் செய்திகளை அனுப்ப விரும்பினால் அதற்காக ஒரு பிரத்யேக சாட் ஸ்க்ரீனும் பார்ட்டி வாட்ச்சில் உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த அம்சம் அமேசான் பிரைம் வீடியோ வெப் கிளையன்டுடன் மட்டுமே இயங்குகிறது மற்றும் இதனை ஆப் மூலம் திறக்க முயற்சிக்கும் பயனர்கள் அவர்களின் தொலைபேசியின் வெப் பிரௌசருக்கு தானாக ரீடிரெக்ட் செய்யப்படுவார்கள் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ட்ரீமிங் இயங்குதளத்தில் வாட்ச் பார்ட்டியை எவ்வாறு பயன்படுத்தலாம்:

* பிரைம் வீடியோ வெப் பிரவுசரை திறந்து, குரூப் ஸ்ட்ரீம் செய்ய விரும்பும் டிவி ஷோ அல்லது மூவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

* அதில் பகிர்வு விருப்பத்திற்கு அடுத்ததாக இருக்கும் வாட்ச் பார்ட்டி பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

* பிறகு ஒரு பெயரை உள்ளிட்டு நகலெடுக்கப்பட்ட லிங்கை ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் அனுப்பவும்.

* இதன் மூலம் உங்கள் நண்பர்களுடன் விர்ச்சுவல் முறையில் ஒன்றாக சேர்த்து நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.

Also read... இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் இன்ஸ்டாகிராமின் "லைவ் ரூம்ஸ்" அம்சம்!



இ-காமர்ஸ் நிறுவனம், தற்போது வெளியிட்டுள்ள வாட்ச் பார்ட்டி அம்சம் தொற்றுநோய்களின் போது சமூக தூரத்தை ஊக்குவிக்கும் என்று நம்புகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பயனர்கள் ஒன்றாக சேர்த்து திரைப்படங்களை காண இந்த அம்சம் முக்கியமாக அனுமதிக்கிறது. தற்போது இந்தியாவில், அமேசான் பிரைம் சந்தா மாதத்திற்கு ரூ.129 அல்லது ஆண்டுக்கு ரூ.999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தா அமேசான் இசையில் எச்டி தரமான இசை, அமேசான்.காமில் பிரைம் உறுப்பினர் மற்றும் பலவற்றிற்கான அணுகலையும் வழங்குகிறது.

மேலும், இது டெலிபார்டி (Teleparty) அம்சத்தைப் போலல்லாமல், பிரைம் வீடியோக்களில் வாட்ச் பார்ட்டி அம்சம் எந்த ஒரு பிளக்-இன்ஸ் இல்லாமலும் செயல்படுகிறது. அதாவது நெட்ஃபிளிக்சில் குரூப் ஸ்ட்ரீம் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வெப் எக்ஸ்டன்ஷன் தேவைப்படுகிறது. இதேபோல், டெலிபார்டி கூகிள் குரோம் பிரவுசருடன் மட்டுமே செய்லபடுகிறது. ஆனால் பிரைமில் பயனர்கள் பல வெப் பிரவுசர்களில் வாட்ச் பார்ட்டியை ஹோஸ்ட் செய்யலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: