ஒரு அமேசான் ப்ரைம் கணக்கை இனி 6 பேர் பயன்படுத்தலாம்!

அமேசான் ப்ரைம்

இதில் குழந்தைகளுக்காக  kids profile என்ற ஆப்ஷனும் தானியங்கியாகவே இணைக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  அமேசான் ப்ரைம் கணக்கு வைத்திருப்போர் இனி தங்களது கணக்கிலேயே ஆறு பயனாளர்களை அதிகாரப்பூர்வமாகவே இணைத்துக்கொள்ளலாம்.

  நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்த இந்த சலுகை தற்போது அமேசான் ப்ரைம் தளத்திலும் அறிமுகம் ஆகியுள்ளது. ஒரு தலைமைப் பயனாளர் தனக்குக் கீழ் ஆறு புதிய ப்ரொஃபைல் தயார் செய்து இணைத்துக்கொள்ளலாம்.

  இந்தியாவில் அமேசான் ப்ரைம் ஃபயர் டிவி-யிலும் கிடைக்கிறது. அதனால், தற்போதைய சூழலுக்கு ஃபயர் டிவி வழியாக மட்டுமே கூடுதல் பயனாளர்களை இணைக்க முடியும். இந்த வசதி தற்போதைய சூழலில் இன்னும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS-களில் வெளியாகவில்லை.

  இதில் குழந்தைகளுக்காக  kids profile என்ற ஆப்ஷனும் தானியங்கியாகவே இணைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.

  மேலும் பார்க்க: கொரோனா பாதிப்புள்ள ஓட்டுநர்களுக்கு தினமும் 1,000 ரூபாய்- ஓலா அறிவிப்பு
  Published by:Rahini M
  First published: