இன்றைக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மக்கள் தங்களை அப்டேட் செய்துக்கொள்கின்றனர். குறிப்பாக கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கிச்சென்ற காலங்கள் மறந்து ஆன்லைனில் தற்போது வணிகம் அமோகமாக நடைபெற்றுவருகிறது. அமேசான், பிளிப்கார்டு, மீசோ போன்றவற்றில் மக்கள் வீட்டிற்குத் தேவையான மளிகை, அத்தியாவசிய பொருள்கள், ஆடைகள் என ஆர்டர் செய்து வாங்குகின்றனர்.
குறிப்பாக அமெரிக்காவின் மிகப்பெரிய வணிக நிறுவனமான அமேசான் தற்போது மக்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்நிலையில் சில்லறை வர்த்தகம் மட்டுமில்லாது இணையத்தில் தங்களுக்கு விருப்பமான ஷோக்கள் மற்றும் படங்களை பார்ப்பதற்கு அமேசான் பிரைமும் மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. ஆரம்பத்தில் அமேசான் பிரைமை தொடங்குவதற்கு எவ்வித இடர்பாடுகள் இல்லாமல் பயன்படுத்தும் வசதி இருந்த நிலையில், இதனை விட்டு வெளியில் வர வேண்டும் என்றால் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் பலர், இதன் ரத்து செயல்முறை குறித்து பல புகார்களை அளித்திருந்தார்கள். அதில் எளிமையாக சந்தாவை பெறும் நாங்கள், இதிலிருந்து வெளியே வருவது என்றால் சுலபமாக முடியவில்லை என புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் இது குறித்து கருத்து தெரிவித்த பலரும் வேகமான ஷிப்பிங் ஆன்லைன் சந்தாவைத் தேர்ந்தெடுப்பது நுகர்வோருக்கு மிகவும் எளிமையாக இருப்பது போல அதிலிருந்து விலகுவதற்கான எதிர் நடவடிக்கையும் எளிதாக இருக்க வேண்டும் என்றனர். எப்படி சுலபமான முறையில் அமேசான் ப்ரைமை பயன்படுத்த தொடங்குகிறார்களோ அதே போல அதிலிருந்து விலகும் நடைமுறையும் எளிதாக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் தான் அமேசான் பிரைம் பயனர்களிடமிருந்து வந்த புகார்களையடுத்து ஓராண்டிற்கு பிறகு, விலகும் செயல்முறையை அமேசான் எளிதாக்கியுள்ளது. குறிப்பாக அமேசானின் வருடாந்திர பிரைம் டே ஷாப்பிங் முடிவடையும் நிலையில், நிறுவனம் தங்கள் உறுப்பினர் சேவையை இரண்டு கிளிக்குகளில் ரத்து செய்வதை அனுமதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இனி எவ்வித குழப்பங்களும் இல்லாமல் தங்களது சந்தா உறுப்பினரை கேன்சல் பட்டன் உபயோகத்தோடு 2 கிளிக்குகளில் ரத்து செய்து கொள்ள முடியுமாம். அமேசான் பிரைமில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் விரைவில் அனைத்து EU இணையதளங்களுக்கும், டெஸ்க்டாப் சாதனங்கள், மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கும் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிகிறது.
Also Read : ஒரு போன் கால் மூலம் WhatsApp அக்கவுண்ட் திருடப்படுவது எப்படி.? இதிலிருந்து தப்பிக்கும் வழிகள்!
எனவே அமேசான் ப்ரைம் யூஸர்கள் இதனை முழுமையாகத் தெரிந்து கொண்டு, இந்த சூப்பரான வசதியை நீங்கள் இனி வரும் காலங்களில் தேவைப்படும் பட்சத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.