• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Amazon Prime சந்தா விலை அதிகரிப்பு – இனி எவ்வளவு தெரியுமா?

Amazon Prime சந்தா விலை அதிகரிப்பு – இனி எவ்வளவு தெரியுமா?

அமோசன் ப்ரைம்

அமோசன் ப்ரைம்

அமேசான் பிரைம் உறுப்பினர் கட்டணம் 50 சவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது

  • Share this:
    அமேசான் பிரைம் இந்தியாவில் மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. இந்தியாவில் முதன்மையான ஓடிடி தளங்களில் ஒன்றாக இருக்கின்றது. பலரும் அமேசான் பிரைம் சப்ஸ்கிரைப் செய்ததற்கு முதல் காரணம், அமேசான் உறுப்பினர் கட்டணம் விலை குறைவு என்பது தான். கூடுதலாக, அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் இருந்தால், அமேசானில் வாங்கும் பொருட்கள் இலவசமாக, விரைவாக டெலிவரி செய்யப்படும். இந்நிலையில், அமேசான் தன்னுடைய பிரைம் மெம்பர்ஷிப் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. ஓராண்டு மெம்பர்ஷிப் கட்டணம் ரூ. 999 இல் இருந்து ரூ. 1499 ஆக அதிகரிக்கப்படுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அமேசான் பிரைம் உறுப்பினர் கட்டணம் 50 சவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாக, இது வரை ரூ. 999 க்கு வழங்கப்பட்டு வந்த ஒரு ஆண்டுக்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பின் கட்டணம் இனி ரூ. 1,499 ஆக உயர இருக்கிறது. வருடாந்திர மெம்பர்ஷிப் கட்டணம் மட்டுமின்றி, அமேசானின் பிற மெம்பர்ஷிப் கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது.

    அமேசானின் பிரைம் மெம்பர்ஷிப்பின் புதுபிக்கப்பட்ட விலை விவரங்கள் இங்கே.,

    இது வரை குவார்ட்டர்லி மெம்பர்ஷிப் கட்டணமாக ரூ. 329 வசூலிக்கப்பட்டிருந்தது. மூன்று மாத கால பிரைம் உறுப்பினர் கட்டணமாக இனி ரூ.459 வசூலிக்கப்படும். அதே போல, மாதாந்திர உறுப்பினர் சந்தாவும் அமேசானில் உள்ளது. ஒரு மாத காலம் வரை நீடிக்கும் இந்த உறுப்பினர் கட்டணம் ரூ. 129ல் இருந்து ரூ. 179ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    Also Read : paytm : ரூல்ஸை பின்பற்றாத காரணத்தினால் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்குக்கு ரூ.1 கோடி அபராதம்!

    ஏற்கனவே பிரைம் மெம்பர்ஷிப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள், அவர்களின் மெம்பர்ஷிப் காலம் காலாவதியாகும் வரை தற்போதைய விலையிலேயே பயன்படுத்தலாம். சமீபத்தில் மெம்பர்ஷிப் புதுப்பிப்பு செய்தவர்களுக்கும் இது பொருந்தும். ஆனால், விலை ஏற்றம் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு மெம்பர்ஷிப் வாங்கும் போது, ஏற்கனவே இருக்கும் மெம்பர்ஷிப்பை விலையேற்றம் ஆன பிறகு ரின்யூ செய்தால் புதிய விலையில் தான் சந்தாவைப் பெற முடியும்.

    எப்போது விலை உயர்வு அமல் படுத்தப்படும் என்ற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. ஆனால், ‘மிக விரைவில்’ அறிவிப்பு வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சந்தாவின் விலை உயரும் போது, உங்களின் அனுமதியின்றி, நீங்கள் பதிவு செய்திருக்கும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் இருந்து அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

    மற்ற போட்டித் தளங்களான நெட்ஃபிளிக்ஸ், ஆப்பிள், ஃபிளிப்கார்ட் உட்பட, பல தளங்களின் மெம்பர்ஷிப் கட்டணங்களை ஒப்பிடும் போது, அமேசானின் பிரைம் மிகவும் குறைந்த விலையில் உறுப்பினர் கட்டணத்தை வசூலித்து வந்துள்ளது. அது மட்டுமின்றி, பல்வேறு சேவைகளையும் பிரைம் உறுப்பினர் அனுபவிக்கும் விருப்பங்களையும் வழங்கியுள்ளது. அமேசானின் பல்வேறு சேவைகளையும், தயாரிப்புகளையும் ஒரே குடையின் கீழ் பயன்படுத்தி வரும் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை உயர்வு செய்தி அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: