அமேசான் ப்ரைம் வழங்கும் யூத் ஆஃபர்... 18-24 வயதுடையோருக்கு அசத்தல் கேஷ்பேக்..!

அமேசான் ப்ரைம்

999 ரூபாய் செலுத்தி ப்ரைம் திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு 10 நாட்களுக்குப் பின்னர் 500 ரூபாய் திரும்ப அளிக்கப்படும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு 50 சதவிகித கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசானில் ப்ரைம் டே சேல் வருகிற 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு 50% ப்ரைம் கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. இளைஞர்கள் அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பினால் 50 சதவிகிதம் அதாவது 500 ரூபாய் கேஷ்பேக் ஆக வழங்கப்படும்.

அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைவதற்கான கட்டணம் 999 ரூபாய். இந்த ஓராண்டுக்கான சந்தாவிலிருந்து 500 ரூபாய் கேஷ்பேக் ஆக பதிவு செய்யும் இளைஞர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டம் வருகிற ஜூலை 15-ம் தேதி அமேசானில் தொடங்குகிறது. இரண்டே நாள் மட்டுமே ப்ரைம் டே கொண்டாடப்படுகிறது.

999 ரூபாய் செலுத்தி ப்ரைம் திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு 10 நாட்களுக்குப் பின்னர் 500 ரூபாய் திரும்ப அளிக்கப்படும்.

மேலும் பார்க்க: ஜூலை 15 முதல் ஃப்ளிப்கார்ட் வழங்கும் ‘பிக் ஷாப்பிங் டே சேல்’..!

Published by:Rahini M
First published: