PUBG கேம் விளையாடுவோருக்கு அமேசான் வழங்கும் அசத்தல் ஆஃபர்!

ஆன்லைன் கேம் அம்சத்தையும் விரைவில் ப்ரைம் சந்தாவில் அமேசான் இணைக்க உள்ளது.

PUBG கேம் விளையாடுவோருக்கு அமேசான் வழங்கும் அசத்தல் ஆஃபர்!
pubg அமேசான் ஆஃபர்
  • News18
  • Last Updated: September 23, 2019, 9:19 PM IST
  • Share this:
அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் கேம் விளையாட சிறப்பு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் கேம் ரகங்களை இனிமேல் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் இலவசமாகவே விளையாடலாம் என அமேசான் அறிவித்துள்ளது. குறிப்பாக ஆன்லைன் ராயல் கேம் என்று அழைக்கப்படும் PUBG கேம் விளையாடுவோருக்கு இன்ஃபில்ட்ரேட்டர் மாஸ்க், ஜாக்கெட், பேண்ட், ஷூ ஆகிய கேம் ரீதியான சிறப்பம்சங்களும் வழங்கப்பட உள்ளன.

ஆன்லைன் கேம் அம்சத்தையும் விரைவில் ப்ரைம் சந்தாவில் அமேசான் இணைக்க உள்ளது. PUBG மட்டுமல்லாது EA, மூன்டான், நெட்மார்பிள், வார்கேமிங் மொபைல் உள்ளிட்ட பல ஆன்லைன் கேம்களுக்கும் இந்த ஆஃபர் அமேசான் ப்ரைம் மூலம் வழங்கப்பட உள்ளது. மொபைல், கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து விதமான தளங்களிலும் இந்த சேவை கிடைக்கும்.


எந்த நாட்களில் என்ன ஆஃபர் வழங்கப்படும் என்ற விவரத்தையும் அமேசான் வெளியிட்டுள்ளது.

Drop 1: செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரையில் - இன்ஃபில்ட்ரேட்டர் மாஸ்க்

Drop 2: அக்டோபர் 4 முதல் 17-ம் தேதி வரையில் - இன்ஃபில்ட்ரேட்டர் ஜாக்கெட்Drop 3: அக்டோபர் 18 முதல் 31-ம் தேதி வரையில் – இன்ஃபில்ட்ரேட்டர் ஷூ

Drop 4: நவம்பர் 1 முதல் 14 வரை – இன்ஃபில்ட்ரேட்டர் பேன்ட்ஸ்

Drop 5: நவம்பர் 15 முதல் 28-ம் தேதி வரை- Epic Level Gun, Blood Oath Kar98K

Drop 6: நவம்பர் 29 முதல் டிசம்பர் 12 வரை- Epic Level Black Magma Parachute

மேலும் பார்க்க: இரண்டு டெஸ்ட்டில் ‘பாஸ்’... இரண்டில் ‘ஃபெயில்’ - வெளியாகுமா சாம்சங் கேலக்ஸி Fold?

தமிழன் முதல் பிகில் வரை! தளபதி விஜய் பேசிய அரசியல்
First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்